முகத்து மேல கால் நீட்டுவது விளையாட்டா?... அண்ணாச்சியின் செய்கையால் கடுப்பான இசைவாணி !
சென்னை : பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் 46வது நாள் எபிசோடு நேற்று ஒளிபரப்பானது. இதில் வழக்கம் போல இமான் அண்ணாச்சிக்கும் இசைவாணிக்கும் முட்டி கொண்டது.
நீர் ஆளுமை வாரம் என்பதால் பாத் ரூம் ஏரியாவை வருண் ஆளுமைய செய்து வருகிறார். எதாவது தண்டனை கொடுத்தே ஆக வேண்டும் என்பதால், விதவிதமான என்டெர்டெயினிங் டாஸ்க்குகளை கொடுத்து வருகிறார் வருண்.
யாரும் நோ சொல்லாத முடியாதுபடி கூலா டாஸ்க்களை கொடுத்து பாத் ரூம் ஏரியாகை ஆட்சி செய்து வருகிறார். பரவாலப்பா நீ கேம்மை விளையாடத் தெரிஞ்ச ஆளுதான் என்று சொல்ல வைக்கிறது.

இதுதான் காரணமா
பிக் பாஸ் பாஸ் வீட்டில் இமான் அண்ணாச்சிக்கும் இசைவாணிக்கும் ஏழாம் பொருத்தம் போல அண்ண்ணாச்சி எது செய்தாலும், முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு திரிவதை வழக்கமாக கொண்டுள்ளார் இசைவாணி. அண்ணாச்சி மேல இருக்கும் கோபத்திற்கு காரணம் என்ன என்பதே நேற்று நடந்த கண்ணாடி டாஸ்கில் தான் தெரிந்தது.

என்னை தெரியாத
பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில், இசைவாணியை பார்த்து நீ யாருமா என்று இயல்பாகவே கேட்டுள்ளார் அண்ணாச்சி, என்னை 8 கோடி பேருக்கு தெரியும் என்று இசைவாணி சொல்ல அட எனக்குத் தெரியாதுமா என்று கேட்டுள்ளார். அண்ணாச்சி தெரியாது என்று சொன்னதை மனதில் வைத்துக்கொண்டு, அண்ணாச்சி நின்னா தப்பு, உங்காந்தா தப்பு என பிரச்சினையை கிளப்பிக் கொண்டு இருக்கிறார் இசைவாணி. தெரியாதுனு சொன்னது ஒரு குத்தமா.

அண்ணாச்சி பண்ணது தப்பு
நேற்றை எபிசோடில், அனைவரும் ஒன்றாக அமர்ந்து விளையாடிக்கொண்டு இருந்தார்கள் அப்போது அண்ணாச்சி கால்களை அப்படியும் இப்படியுமாக ஆட்டி விளையாடிக்கொண்டு இருந்தார். அப்போது, அவரின் அருகில் அமர்ந்து இருந்த இசைவாணியின் முகத்திற்கு நேராக கால்களை காட்டி விளையாடினார். இதனால் , கடுப்பான இசைவாணி, மூஞ்சிக்கு நேரா காலை காட்டுவது தப்பு இல்லையா ஏன் இப்படி பண்றீங்கா என்று கோபத்தில் கத்தினார்.

கடுப்பான இசைவாணி
இதற்கு அண்ணாச்சி, நான் விளையாட்டாத்தான் பண்ணேன், நான் பண்ணது தவறு என்றால் சாரி என்றார். உடனே, அண்ணாச்சி விளையாட்டுக்குத்தான் பண்ணாரு இசைவாணி கூல் என்று ஐக்கி கூற, மீண்டும் கடுப்பான இசைவாணி இந்த விசயத்தில் நீ வராத உன் வேலையை பாருனு என்று சொன்னார். அட சண்டை போட்ட முழுசா போடுங்கப்பா... என்னது சின்னப்புள்ளத்தனமாக சண்டை என்று பிக் பாஸ் ரசிகர்கள் கேட்கின்றனர்.


Click it and Unblock the Notifications











