என்னை சீண்டி பார்க்காதே… நிரூப்பிற்கு எச்சரிக்கை விடுத்த வருண் !
சென்னை : கண்ணாடி டாஸ்கில் நிரூப்பை செய்த தவறுகள் அனைத்தையும் சுட்டிக்காட்டி சரமாரியாக தாக்கிப்பேசினார் வருண்.
நிரூப் பார்ப்பதற்கு ஹைட் அண்ட் வெயிட்டா இருப்பதால் இவர் குரலை சற்று உயர்த்தி பேசினாலே போட்டியாளர்கள் நமக்கு எதுக்குப்பா வம்பு என்று அடங்கி போய் விடுகிறார்கள் இது நிரூப்பிற்கு பிஸ்ஸாகி விட்டது.
இதனால், யார் பேச்சையும் கேட்காமல், அவர் இஷ்டத்திற்கு அவர் செய்வதைத்தான் செய்து வருகிறார்.

கண்ணாடி டாஸ்க்
பிக் பாஸ் வீட்டில் உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடி டாஸ் நடைபெற்று வருகிறது. இந்த டாஸ்க்கிற்காக போட்டியாளர்கள் இரண்டு அணிகளாக பிரிக்கப்பட்டு உள்ளனர். டீம் 'A' கண்ணாடியாக மாறி, டீம் 'B' யினரை பிரதிபலிக்க வேண்டும் என பிக் பாஸ் அறிவித்தார்.

இரு அணியாக
இரண்டாவது நாளான நேற்று, முதல் சுற்றில் இருந்த ஜோடிகள் அனைத்தும் மாற்றப்பட்டன. அதன்படி, அபினய் - சிபியின் கண்ணாடியாகவும், இமான் - ஐக்கியின் கண்ணாடியாகவும், வருண் - நிரூப்பின் கண்ணாடியாகவும், ராஜு - பிரியங்காவின் கண்ணாடியாகவும், அக்ஷ்ரா - பாவ்னியின் கண்ணாடியாகவும், தாமரை - இசைவாணியின் கண்ணாடியாகும் பிரதிபலிக்க வேண்டும் என பிக் பாஸ் அறிவித்தார். இதனை தொடர்ந்து லிங்கிங் எரியாவில் ஜோடிகளாக பிரிக்கப்பட்ட இருவரும் கைக்கோர்த்து சேர்ந்து நின்று ஒருவர் பற்றிய கருத்துக்களை கூறி வருகின்றனர்.

என்னை சீண்டுனா அவ்வளவுதான்
இதையடுத்து, கண்ணாடி டாஸ்கில் வருண் நிரூப்பை சரமாரியாக தாக்கி பேசினார். நான் தான் பெரியஆளு, என்னா அடிச்சிக்க ஆளு இல்லை என்கிற எண்ணம் உன் மனசுக்குள்ள இருக்கு, இத்தனை நாள் வரைக்கும் நான் அமைதியா இருந்தேன். ஆனால், பொம்மை டாஸ்கில் சும்மா இருந்தவனை நீ சீண்டுனா, நான் உன்னை நோண்டுனேன்.யாரா இருந்தாலும் , தப்புனா தப்புத்தான் என்றார்.

நீ அப்பாடக்கரா
நீ இந்த வீட்டை ஆளுமை செய்யும் போது உன் பேச்சு எல்லோரும் கேட்டார்கள், ஆனால் மற்றவர்கள் ஆளுமை இருக்கும் போது நீ எதையுமே கேட்கவில்லை, நான் சொன்னா நீ கேட்க மாட்டியா, நீ என்ன பெரிய அப்பாடக்கரா...ஹைட்லா பெரியவனா இருந்த நீ என்ன பெரிய மாஸா, இரு உன்னை வெச்சி செய்ய போறேன் என்று மனதில் தேக்கி வைத்து இருந்த அத்தனை விஷயங்களையும் படபடவென கொட்டி தீர்த்துவிட்டார் வருண். வருண் பேசிதைய ஹவுஸ்மெட்டுகள் பலரும் பாராட்டினார்கள். அதேபோல ,நெட்டிசன்களும் இணையத்தில் வருணை புகழ்ந்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











