என் பேச்சை நீ கேட்டுத்தான் ஆகணும்…வருண், நிரூப் இடையே மீண்டும் மோதல் !
சென்னை : பிக் பாஸ் வீட்டில் இன்றும் வருண் கொடுத்த டாஸ்க்கை நிரூப் செய்யாததால், இருவருக்கும் இடையே வாய்த்தகராறு நடந்தது.
நீர் நாணயத்தை வைத்திருக்கும் வருணுக்கு இந்த வாரம் வீட்டை ஆளும் பவர் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனால் வருண் பாத் ரூம் ஏரியா முழுவதும் ஆளுமை செய்து வருகிறார்.

குழந்தைகள் டாஸ்க்
வருண் பாத்ரூம் ஏரியாவை ஆட்சி செய்து வருவதால், யார் பாத்ரூமுக்குள் வந்தாலும் வருண் கொடுக்கும் டாஸ்க்கை செய்து விட்டுத்தான் செல்லவேணும் என்று விதி உள்ளதால், பெரியதாக டாஸ்க் எதுவும் கொடுத்து போட்டியாளர்களை கஷ்டப்படுத்தாமல், குழந்தை மாதிரி பேசு, குழந்தை மாதிரி நட என, எல்கேஜி ஸ்டாண்டுக்கு கொடுக்கும் டாஸ்க்கை கொடுத்து வருகிறார்.

செம அட்டகாசம்
இசைவாணி நெருப்பு நாணயத்தை வைத்து இருந்த போது சமைக்க எண்ணெய் தராமல் அட்டகாசம் செய்தார், நிலத்தின் நாணயத்தை வைத்திருந்த நிரூப் போதுகூட வீடே இரண்டாகும் அளவுக்கு அட்டகாசம் செய்து அலப்பறை செய்தார்.

தண்ணீர் குடிக்கும் டாஸ்க்
இன்றைய எபிசோடில், காலையில் அனைத்து போட்டியாளர்களுக்கும் தண்ணீர் கொடுக்கும் டாஸ்க் கொடுத்தார் வருண். அப்போது நிரூப் மட்டும் அந்த டாஸ்க்கை செய்யாமல், நான் தண்ணீர் குடிக்க முடியாது, நான் இப்போதுதான் குடிச்சேன் என்று கூறினார். நான் எது சொன்னாலும் செய்யாமல் எதிர்த்து எதிர்த்து நீ பேசுற இது நீரின் ஆளுமை நான் சொல்றதை நீ செய்யணும் என்கிறார் வருண்.

கோபத்தில் நிரூப்
நிரூப் வருண் சொல்வதை தொடர்ந்து மறுத்தார் இதனால் கோபமான வருண் நான் என்ன சொன்னாலும் நீ செஞ்சிதான் ஆகணும் என்று ஆத்திரத்தில் கத்தினார். இதை எதையுமே காதில் வாங்காதவாறு நிரூப் அங்கிருந்து சென்று விடுகிறார்.

நிரூப் ஓவர் ஆட்டம்
நிரூம் யார் பேச்சையும் கேட்காமல், பிக் பாஸ் வீட்டில் நான் வைத்தது தான் சட்டம் என்பது போல திரிந்து கொண்டு இருக்கிறார். பொம்மை டாஸ்க்கில் கூட ரொம்ப மோசமாக விளையாடினார். இந்த பிரச்சினை குறித்து கமல் நிரூப்பிடம் கேள்வி கேட்பார் என்று அனைவரும் எதிர் பார்த்த நிலையில், ஒன்றுமே நடக்காதது போல பூசி முழுகினார் கமல். யாரும் நம்மை கேள்வி கேட்கமாட்டார்கள் என்ற தைரியததில், யார் பேச்சையும் கேட்காமல் ஆட்டம் போட்டு வருகிறார் நிரூப்.


Click it and Unblock the Notifications











