நீ நீயாவே இரு… சிபி குறித்து அபிநய்.. வழவழ கொழகொழ பேச்சு !
சென்னை : கண்ணாடி டாஸ்கில் சிபியின் கண்ணாடியாக மாறிய அபிநய் அவரின் குறை நிறைகளை கூறினார்.
அபிநய் எந்த விஷயத்தையும் நேராவே சொல்ல மாட்டாரு போல, சிபி குறித்து அவர் பேசியது என்னனே போட்டியாளர்களுக்கும் புரியல நமக்கும் புரியல.
ஆளு ஆளுக்கு முகத்தை முகத்தை உற்று பார்த்துக்கொண்டு எப்படா முடிப்ப என்பது போல முகத்தை வைத்து இருந்தனர்.

மிர்ரல் டாஸ்க்
பிக் பாஸ் வீட்டில் உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடி டாஸ் நடைபெற்று வருகிறது. இந்த டாஸ்க்கிற்காக போட்டியாளர்கள் இரண்டு அணிகளாக பிரிக்கப்பட்டு உள்ளனர். டீம் 'A' கண்ணாடியாக மாறி, டீம் 'B' யினரை பிரதிபலிக்க வேண்டும் என பிக் பாஸ் அறிவித்தார்.

அபினய் சிபியின் கண்ணாடியாக
இரண்டாவது நாளான நேற்று, முதல் சுற்றில் இருந்த ஜோடிகள் அனைத்தும் மாற்றப்பட்டன. அதன்படி, அபினய் - சிபியின் கண்ணாடியாகவும், இமான் - ஐக்கியின் கண்ணாடியாகவும், வருண் - நிரூப்பின் கண்ணாடியாகவும், ராஜு - பிரியங்காவின் கண்ணாடியாகவும், அக்ஷ்ரா - பாவ்னியின் கண்ணாடியாகவும், தாமரை - இசைவாணியின் கண்ணாடியாகும் பிரதிபலிக்க வேண்டும் என பிக் பாஸ் அறிவித்தார். இதனை தொடர்ந்து லிங்கிங் ஏரியாவில் ஜோடிகளாக பிரிக்கப்பட்ட இருவரும் கைக்கோர்த்து சேர்ந்து நின்று ஒருவர் பற்றிய கருத்துக்களை கூறி வருகின்றனர்.

அப்பாடக்கரா
இதையடுத்து, நேற்று நடைபெற்ற கண்ணாடி டாஸ்கில் வருண் நிரூப்பை சரமாரியாக தாக்கி பேசினார். நீ என்ன பெரிய மாஸா என்று, நீ என்ன பெரிய அப்பாடக்கரா என்றும் சரமாரியாக அவரை விமர்சித்தார்.

சிபியின் கண்ணாடி அபிநய்
சிபியின் கண்ணாடியாக உள்ள அபிநய், அவரின் குறைநிறைகளை பேசினார். அதில்,இந்த வீட்டிற்குள் உன்னை முதலில் பார்த்து நான் மிகவும் பிரமித்து போனேன். நாட்கள் செல்ல செல்ல உனக்குள்ளேயே ஒரு குழப்பம் வந்து உன்னை நீயே குழப்பிக்கிட்ட என்றார்.

நீ நீயா இரு
மேலும் பேசிய அவர், நீங்க ரொம்ப நேர்மையானவர், சில சமயம் நீங்கள் நீங்களாவே இல்லை, நீ நீயாவே இரு எதற்காவும் உங்களை மாற்றிக்கொள்ள வேண்டாம் என்று, அவிநய் சிபிக்கு அறிவுரை கூறினார். அபிநய் எப்போதுமே வழவழ கொழகொழனுத்தான் பேசுவாரு போல, இந்த டாஸ்கில் எப்போடா முடிப்பாருனு நினைச்ச வெச்சிட்டாரு.


Click it and Unblock the Notifications











