Don't Miss!
- Automobiles
ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக்கின் முதல் சர்வீசுக்கான செலவு எவ்வளவு தெரியுமா? நம்பவே முடியல இவ்ளோ
- News
ஒரு வேளைக்கு ரூ 3 லட்சத்தில் டீ குடிக்கும் நீடா அம்பானி.. மகன் நிச்சயத்தில் செய்த காரியம் தெரியுமா?
- Technology
அவசரப்பட்டு.. ரூ.9999 கொடுத்து.. Infinix Note 12i ஸ்மார்ட்போனை வாங்கிடாதீங்க.. ஏன்னா?
- Lifestyle
வார ராசிபலன் 29 January to 04 February 2023 - இந்த வாரம் இந்த ராசிக்காரர்களுக்கு சவால் நிறைந்ததாக இருக்கும்!
- Sports
லக்னோவில் காத்திருக்கும் ஆபத்து.. டாஸ் ஃபார்முலா ஓர்க் அவுட் ஆகாது.. என்ன செய்வார் ஹர்திக் பாண்டியா
- Finance
ஏலத்திற்கு வந்த டயானா-வின் வெல்வெட் கவுன்.. விலை மட்டும் கேட்காதீங்க..!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
அட்டக் கத்தி அசீம், காமெடி பீஸ் மைனா நந்தினி… Simply Wasted என பங்கமாக கலாய்த்த பிக் பாஸ்!
சென்னை: பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் கொடுக்கப்பட்ட ஏலியன்ஸ் - பழங்குடியின மக்கள் டாஸ்க் முடிவுக்கு வந்தது.
சண்டை, சச்சரவுகள் என நடந்து வந்த இந்த டாஸ்க்கின் முடிவுகள் இன்று இரவு தெரியவரும்.
இந்நிலையில், தற்போது வெளியான இன்றைய தினத்துக்கான மூன்றாவது ப்ரோமோவில் அசீம், மைனா நந்தினி இருவரையும் பிக் பாஸ் பங்கமாக கலாய்த்துள்ளது வைரலாகி வருகிறது.
அசீம் அமுதவாணனை அடித்தாரா? பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?

ஏலியன்ஸ் VS பழங்குடிகள் டாஸ்க் நிறைவு
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இந்த வாரம் ஏலியன்ஸ் - பழங்குடிகள் என்ற அவதார் கான்செப்ட்டில் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில், அசீம், விக்ரமன், ஷிவின், கதிர், மைனா நந்தினி உள்ளிட்டோர் பழங்குடியினர் அணியிலும், மணிகண்டன், அமுதவாணன், தனலட்சுமி, குயின்ஷி உட்பட இன்னும் சிலர் ஏலியன்ஸ்களாகவும் களமிறங்கினர். பல கட்டங்களாக நடைபெற்ற இந்த டாஸ்க், நேற்றைய தினம் இரவு கலைநிகழ்ச்சிகளோடு முடிவுக்கு வந்தது. இந்நிலையில், இன்று இரவு இந்தப் போட்டியில் வெற்றிப் பெற்றவர்கள் யார் என்பது தெரியவரும்.

பிக்பாஸ் 54வது நாள் ப்ரோமோ
இந்த டாஸ்க் தொடங்கிய நாள்முதலே, அசீம்க்கும் சக போட்டியாளர்களுக்கும் இடையே சண்டை நடந்துகொண்டே இருந்தது. இந்நிலையில், இன்று வெளியான முதல் ப்ரோமோவில் எல்லோரும் தூங்கிய பின் பூவை எடுத்து ஒளித்து வைத்தது நான் தான் என அசீம் ஒத்துக்கொள்ள, அவருக்கும் மணிகண்டனுக்கும் சண்டை வந்தது. இரண்டாவது ப்ரோமோவில் அசீம் பற்றி விமர்சனங்களை முன்வைத்தார் விக்ரமன். அதற்கு அசீம் பதில் கொடுக்க, விக்ரமன் அவரை அட்டக் கத்தி என ஒரே போடாக போட்டுவிட்டார்.

சிம்பிளி வேஸ்டட்
இந்நிலையில், தற்போது இன்றைய தினத்தின் மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதில், இந்த வாரத்தின் சிறந்த போட்டியாளர்கள், வொர்ஸ்ட் பெர்ஃபாமன்ஸ் குறித்த வாக்கெடுப்பு ஹவுஸ்மேட்ஸ்களிடம் எடுக்கப்பட்டுள்ளது என தெரிகிறது. இறுதியாக ஸ்டோர் ரூம் சென்ற மணிகண்டன் இரண்டு போர்டுகளை எடுத்து வருகிறார். அதில், Simply Wasted என எழுதப்பட்டுள்ளது. அந்த Simply Wasted என்ற போர்டை அசீம், மைனா நந்தினி ஆகியோரின் கழுத்தில் மாட்டிவிடுமாறு பிக் பாஸ் உத்தரவிட, அதனை அவர்களும் பெருமையாக ஏற்றுக்கொள்கிறார்கள்.

மைனா சொன்ன லிஸ்ட்
அதன்பின்னர் எழுந்து செல்லும் மைனா நந்தினி, "என்னட சிம்பிளி வேஸ்டட்ன்னு சொல்றீங்க... எவ்ளோ பேரு வேஸ்ட்டா உக்காந்துருக்கீங்கன்னு யோசிச்சுப் பாருங்கடா டேய்" என நக்கலாக சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார். ஏற்கனவே இந்த வாரம் எவிக்சன் நாமினேஷனில் குயின்ஷி, ரச்சிதா ஆகியோர் லீடிங்கில் இருக்க, அவர்களை கலாய்க்க மைனா நந்தினி அப்படி சொல்கிறாரா அல்லது வேறு யாரையும் கிண்டல் செய்கிறாரா? என ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். அதேபோல், அசீமே சிம்பிளி வேஸ்டட் என்றால், பிக் பாஸ் வீட்டில் சும்மாவே உக்காந்து மிக்சர் சாப்பிடும் மற்ற போட்டியாளர்களுக்கு என்ன போர்டு கொடுப்பீங்க என கேட்டு வருகின்றனர்.