Dhanalakshmi: ஷாலு ஷம்முவை தொடர்ந்து புது கார் வாங்கிய பிக் பாஸ் தனலட்சுமி.. விலை எவ்ளோ தெரியுமா?
சென்னை: டிக் டாக் பிரபலமாக இருந்த தனலட்சுமி கடந்த சீசனில் பிக் பாஸ் போட்டியாளராக பங்கேற்றார். அதன் பின்னர் சைலன்ட் மோடுக்கு சென்று விட்ட தனலட்சுமி தற்போது புதிதாக கார் ஒன்றை வாங்கி இருப்பது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.
சாதாரண குடும்பத்தை சேர்ந்த தனலட்சுமி மக்கள் போட்டியாளராக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியால் கிடைத்தனர்.
ஆனால், ஷிவின் அளவுக்கு கடைசி வரை தாக்குப் பிடிக்க முடியாமல் பாதியிலேயே வீட்டை விட்டு வெளியேறினார் தனலட்சுமி.

பிக் பாஸ் தனலட்சுமி: வித விதமான கெட்டப்புகளை போட்டுக் கொண்டு டிக் டாக்கில் வீடியோ வெளியிட்டு வந்த தனலட்சுமி டிக் டாக் தடை செய்யப்பட்ட நிலையில், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சோஷியல் மீடியாவில் ஆக்டிவ் ஆனார்.
அப்படி இருந்த அவருக்கு பிக் பாஸ் வாய்ப்பு கிடைக்க உள்ளே போட்டியாளராக கலந்து கொண்டு தனது வெளிப்படையான பேச்சால் ஏகப்பட்ட ரசிகர்களை ஈர்த்து 77வது நாளில் அந்த வீட்டில் இருந்து வெளியேறினார்.

ஏகப்பட்ட ட்ரோல்கள்: கடந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னரான அசீமுக்கும் தனலட்சுமிக்கும் தான் அதிக ட்ரோல்கள் குவிந்தன. ஏகப்பட்ட ஹேட்டர்களும் இருந்தனர்.
அசீம் தனலட்சுமியின் மார்பில் கை வைத்து தள்ளி விட்டார், அவருக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என்றெல்லாம் தனா ரசிகர்கள் கொந்தளித்தனர். ஆனால், அதன் பின்னர் விக்ரமுக்கு எதிராக தனா தனது ரூட்டை திருப்பி அசீமுக்கு ஆதரவாக மாறினார். வெளியே வந்து பேட்டி கொடுத்த போதும் அசீம் தனது அண்ணன் எனக் கூறியிருந்தார்.
கார் வாங்கிய தனலட்சுமி: பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் சில ரியாலிட்டி ஷோக்களில் தலையை காட்டி வரும் தனலட்சுமி தற்போது 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார் ஒன்றை வாங்கி உள்ளார்.
பிக் பாஸ் வீட்டில் சம்பாதித்த ஒட்டுமொத்த பணத்தையும் போட்டு புதிய கார் வாங்கி விட்டாரா தனலட்சுமி என ரசிகர்கள் கமெண்ட் போட்டு கலாய்த்து வருகின்றனர். ஆனால், அதே சமயம் கடுமையாக உழைத்து தனலட்சுமி இந்த காரை வாங்கி உள்ளார் என்றும் காரை வாங்கிய சந்தோஷத்தில் இருக்கும் தனாவின் புகைப்படங்களும் வீடியோவும் வெளியாகி டிரெண்டாகி வருகின்றன.
கார் வாங்கிய ஷாலு ஷம்மு: சமீபத்தில், நடிகை ஷாலு ஷம்மு 45 லட்சம் மதிப்புள்ள ஜாகுவார் சொகுசு கார் வாங்கி இருந்தார். போட்டோக்களும், வீடியோக்களும் இன்ஸ்டாகிராமில் வெளியாகி ஏகப்பட்ட லைக்குகளை அள்ளின.
தொடர்ந்து நடிகைகள் பிக் பாஸ் பெண் போட்டியாளர்கள் பலரும் கார் வாங்கி வரும் நிலையில், பிக் பாஸில் கலந்து கொண்ட ஆண் போட்டியாளர்களின் நிலை என்ன என்கிற கேள்விகளும் கிளம்பி வருகின்றன.


Click it and Unblock the Notifications











