புதுப்பேட்டை பாட்டுக்கு புடவை கட்டிட்டு தனலட்சுமி போட்ட குத்தாட்டம்.. ஐஸ்வர்யா ராஜேஷ் அண்ணன் காலி!

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய எபிசோடை அதிகம் ஆக்கிரமித்துக் கொண்டார் தனலட்சுமி என்றே சொல்லலாம்.

யாரை முறைத்தால் கேமராவில் தெரிவோம் என்கிற பக்கா பிளான் உடனே ஜிபி முத்துவுடன் மோதிய தனலட்சுமிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்லாவே ஆதரவு கிடைத்துள்ளது.

கதை சொல்லி டாஸ்க்கிலும் கவனம் ஈர்த்த தனலட்சுமி புதுப்பேட்டை படத்தின் "வரியா வரியா" பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டுள்ளார்.

ஒரே டான்ஸ் தான்

ஒரே டான்ஸ் தான்

பிக் பாஸ் நிகழ்ச்சி அதற்குள்ளே பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியாக மாறி விட்டது. சாந்தி மாஸ்டர் ராபர்ட் மாஸ்டருக்கு சவால் விட்டு ஆடுவது. ஜிபி முத்து ஏடிகேவை நடனத்தால் வீழ்த்துவது என வீடு கொஞ்சம் கலகலப்பாக மாறி உள்ளது. சோக கதையை சொல்லி அழ வைக்கும் நிலையில், அதனை ஈடுகட்ட நடன டாஸ்க்கையும் கொடுத்து ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வருகின்றனர்.

தனுஷ் பாட்டுக்கு தனலட்சுமி டான்ஸ்

தனுஷ் பாட்டுக்கு தனலட்சுமி டான்ஸ்

தனுஷின் புதுப்பேட்டை படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான வரியா வரியா பாடலுக்கு ஸ்டேஜ் ஏறி செம டான்ஸ் ஆடி உள்ளார் தனலட்சுமி. அவருக்கு போட்டியாக ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் மணிகண்டன் நடனமாடி உள்ளார். ஒட்டுமொத்த போட்டியாளர்கள் கவனத்தை மட்டுமின்றி ரசிகர்களின் கவனத்தையும் சேர்த்து ஈர்த்துள்ளார் தனலட்சுமி.

புடவையில் குத்தாட்டம்

புடவையில் குத்தாட்டம்

புதுப்பேட்டை பாடலுக்கு புடவையை கட்டிக் கொண்டு தனலட்சுமி போட்ட குத்தாட்டத்தை பார்த்து மைனா நந்தினி உள்ளிட்ட போட்டியாளர்கள் கரவொலி எழுப்பி அவரை உற்சாகப்படுத்தினர். தனலட்சுமியின் டான்ஸை பார்த்து ஆடிப் போன ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் அதன் வீடியோ க்ளிப்களை ஷேர் செய்து வருகின்றனர்.

ஐஸ்வர்யா ராஜேஷ் அண்ணன்

ஐஸ்வர்யா ராஜேஷ் அண்ணன்

தனலட்சுமி ஆடிய ஆட்டத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் மணிகண்டன் திணறிவிட்டார் என நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். டிக்டாக் வீடியோவை தாண்டி, ஏகப்பட்ட திறமைகள் உள்ளதால் தான் தனலட்சுமியை பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தேர்வு செய்துள்ளனர் என்றும் அவர் கடைசி வரை நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்றும் ஆதரவு குரல்கள் ஒலித்து வருகின்றன.

எகிறும் ஆதரவு

எகிறும் ஆதரவு

தனலட்சுமியின் பர்ஃபார்மன்ஸ் தினம் தோறும் அதிகரித்து வரும் நிலையில், அவருக்கான ஆதரவு பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் எழுந்து வருகிறது. ஜிபி முத்துவை போலவே தனலட்சுமியும் இயல்பாகத்தான் இருக்கிறார் என்றும் அவரை வைத்து ஏகப்பட்ட ட்ரோல் மீம்கள் எல்லாம் போட்டு அசிங்கப்படுத்துறாங்க என கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X