Kaavaala: என்ன தமன்னாவுக்கு பதில் தனலட்சுமி ஆடுறாங்க.. ரொம்ப கேவலம் என கலாய்க்கும் ஃபேன்ஸ்!

சென்னை: ஜெயிலர் படத்தில் அனிருத் இசையமைத்த காவாலா பாட்டுக்கு நடிகை தமன்னா செம ஹாட்டாக போட்ட டான்ஸ் ஏகப்பட்ட பிரபலங்களையும் ரசிகர்களையும் ஈர்த்துள்ளது.

சினிமா நடிகைகள் முதல் பிக் பாஸ் பிரபலங்கள் வரை அந்த பாட்டுக்கு வைப் செய்து இன்ஸ்டாகிராமில் ஏகப்பட்ட ரீல்களை போட்டு வருகின்றனர்.

Bigg Boss Dhanalakshmi grooves for Jailer Kaavaala song

சமீபத்தில் இரவின் நிழல் நடிகை சாய் பிரியங்கா ரூத் இந்த பாட்டுக்கு நடனமாடிய நிலையில், தற்போது பிக் பாஸ் தனலட்சுமி குத்தாட்டம் ஒன்றை போட்டுள்ளார்.

காவாலா தான் டிரெண்டிங்கே: சமீபத்தில் வெளியான லியோ படத்தின் நா ரெடி பாடலை பின்னுக்குத் தள்ளி விட்டு அனைவரையும் ஆட்கொண்டு இருப்பது ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் தமன்னா ஆடும் அந்த காவாலா பாட்டு தான்.

70 சதவீதம் தமிழ், 30 சதவீதம் தெலுங்கில் அனிருத்தை நெல்சன் பாட்டுப் போடச் சொன்னால், அதற்கு மாறாக இந்த பாடல் அதிகமாக தெலுங்கு வாடையே அடிப்பதாக நெட்டிசன்கள் ட்ரோல் செய்தாலும், தமன்னாவின் அந்த இடுப்பாட்டத்தை பார்க்க வரிகளாடா முக்கியம் வளைவுகளை பாருடா என காவாலா லிரிக் வீடியோவை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

Bigg Boss Dhanalakshmi grooves for Jailer Kaavaala song

குவியும் இன்ஸ்டா ரீல்கள்: இன்ஸ்டாகிராமில் விஜய்யின் லியோ பட பாடலான நா ரெடி பாடலை பின்னுக்குத் தள்ளி விட்டு அதிகமான ரீல்களை கொண்ட பாடலாக காவாலா பாடல் இடம்பெற்றுள்ளது. யூடியூப் வியூஸில் நா ரெடி பாடலை வெகு விரைவாகவே இந்த பாடல் ஓவர் டேக் செய்து விடும் என்றும் கூறுகின்றனர்.

நடிகைகள், ரசிகர்கள் என பலரும் இந்த பாடலுக்கு நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு வரும் நிலையில், பிக் பாஸ் தனலட்சுமியும் ஒரு ரீல் வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளார்.

தமன்னாவுக்கு பதில் தனலட்சுமி: காவாலா பாடல் கேட்டதுமே தமன்னா ஆடுறாங்களான்னு பார்த்த ரசிகர்கள் பிக் பாஸ் தனலட்சுமி போட்ட குத்தாட்டத்தை பார்த்ததும் அய்யோ அந்த பாட்டுக்கு இருந்த மரியாதையே போச்சு என்றும் இது காவாலா இல்லை ரொம்ப கேவலம் என பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

பிக் பாஸ் தனலட்சுமி ரசிகர்கள் சூப்பர் அக்கா அப்படியே டிரெண்டிங்கை பிடித்து ரீல்ஸ் போட்டு லைக்குகளை அள்ளுறீங்க ஆஸம் என லைக்குகளையும் ஹார்ட்டின்களையும் குவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X