கரு கரு கருப்பாயிக்கு செம ஆட்டம் போட்ட பிக் பாஸ் பிரபலம்.. விஜய் போலவே டிரெஸ் பண்ணிட்டு பின்றீங்களே!
சென்னை: லியோ படத்தில் ரசிகர்களை 2000 பேருடன் நடிகர் விஜய் ஆடும் நான் ரெடி தான் பாடலை விட அவர் சோலோவாக நடனமாடும் அந்த "கரு கரு கருப்பாயி" பாடல் ரொம்பவே கவர்ந்து விட்டது.
இளம் பெண்கள் பலரும் அந்த பாடலுக்கு இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போட்டு டிரெண்டாக்கி வருகின்றனர்.

இந்நிலையில், பிக் பாஸ் பிரபலமான தனலட்சுமி பேக்கரி ஒன்றில் நடனமாடும் வீடியோவை தற்போது வெளியிட்டு விஜய் ரசிகர்களின் லைக்குகளை அள்ளி வருகிறார்.
கலக்கும் கரு கரு கருப்பாயி: பிரபுதேவா மற்றும் ரோஜா ஏழையின் சிரிப்பில் படத்திற்காக நடனமாடிய கரு கரு கருப்பாயி பாடல் விஜய்யின் லியோ படத்தில் இடம்பெற்ற நிலையில், திடீரென சோஷியல் மீடியாவில் செம டிரெண்டாகி வருகிறது. பல இளம் பெண்கள் கருப்பு கலர் உடை மற்றும் கவர்ச்சிகர உடைகளை அணிந்து கொண்டு அந்த பாடலுக்கு நடனமாடி ரசிகர்களை ஜில்லாக்கி வருகின்றனர்.
பிக் பாஸ் தனலட்சுமி: பிக் பாஸ் போட்டியாளராக கடந்த சீசனில் கலந்து கொண்ட தனலட்சுமி தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த பாடலுக்கு நடனமாடிய வீடியோவை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஒட்டுமொத்தமாக கவர்ந்துள்ளார்.

விஜய் போலவே உடை: டிக் டாக் மூலம் பிரபலமான தனலட்சுமி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு என்ன ஆனார், எங்கே போனார் என்றே தெரியவில்லையே என புலம்பிக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு இன்ஸ்டாகிராமில் மீண்டும் பழைய படி ரீல்ஸ் போட்டுக் கொண்டு தான் இருக்கிறேன் என்பதை வெளிப்படுத்தி வருகிறார். விஜய் போலவே ப்ளூ ஷர்ட் மற்றும் பிளாக் பேன்ட் அணிந்து கொண்டு பேக்கரியில் அதே போல நடனமாடும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

பிக் பாஸ் ஜனனி: ஆனால், தனலட்சுமியுடன் போட்டியாளராக கடந்த 6வது சீசனில் களமிறங்கிய பிக் பாஸ் ஜனனி விஜய்யுடன் லியோ படத்தில் கரு கரு கருப்பாயி பாடல் வரும் காட்சியிலேயே நடித்து விட்டார் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு தனலட்சுமியை ட்ரோல் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











