பிக்பாஸில் அழுதே காரியத்தை சாதித்த தர்ஷா குப்தா.. கிளாமருக்கு தான் லாயக்கு .. கடுப்பான பேன்ஸ்!
சென்னை: பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தர்ஷா குப்தா, அதில் அழுதே பல காரியங்களை சாதித்து வந்தார். விளையாட்டை சரியாக விளையாடாமல், போன வேகத்திலேயே திரும்பி வந்த தர்ஷா குப்தா, மீண்டும் கவர்ச்சியை கையில் எடுத்து தனது இன்ஸ்டாகிராமை அதகளப்படுத்தி வருகிறார். அந்த போட்டோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான முள்ளும் மலரும் சீரியல் மூலம் நடிகை தர்ஷா குப்தா அறிமுகமானார். அந்த சீரியலை தொடர்ந்து செந்தூரப்பூவே சீரியலில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். ஆனால், அவை அனைத்தும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை என்பதால் இன்ஸ்டாகிராமில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அந்த போட்டோக்களில், கவர்ச்சி தூக்கலாக இருந்ததால் இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு.

வெள்ளித்திரையில்: இன்ஸ்டாகிராமில் பிரபலமானதை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் குக்காக கலந்து கொண்டார். ஆனால், அங்கும் அவரால் பிரகாசிக்க முடியாமல் போனதால், போன வேகத்திலேயே திரும்பி வந்துவிட்டார். அதைத்தொடர்ந்து ருத்ர தாண்டவம் படத்தில் ரிச்சர் ரிஷிக்கு மனைவியாக நடித்திருந்தார். அதன்பிறகு ஓ மை கோஸ்ட் படத்தில் நடித்தார். தற்போது இவரின் கைவசம் மெடிக்கல் மிராக்கிள் என்ற திரைப்படம் உள்ளது.

கடுப்பான ஆடியன்ஸ்: இதையடுத்து, தர்ஷா குப்தா பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு, பிக் பாஸ் வீட்டுக்குள் மூன்றாவது போட்டியாளராக சென்ற இவருக்கு மிகப் பெரிய அளவில் ரசிகர் பட்டாளம் இருப்பதால், இவர் வெற்றி வாகை சூடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வீட்டுக்குள் சென்ற தர்ஷா குப்தா, எப்போதும் அழு மூஞ்சியா இருந்து, சின்ன சின்ன விஷயத்திற்கெல்லாம் அழுது காரியத்தை சாதித்தார். கடுப்பான ஆடியன்ஸ் கடுப்பானதால், பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியில் அனுப்பப்பட்டார்.

அழு மூஞ்சி: பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியே வந்த தர்ஷா குப்தா, மீண்டும் கவர்ச்சியை கையில் எடுத்து தனது instagram பக்கத்தில், கவர்ச்சி போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். தற்போது இவர் பீச்சில், கட்டுடலை காட்டியபடி இருக்கும் போட்டோ இணையத்தில் வைரலானது அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள். பிக் பாஸ் வீட்டில், விளையாடுவதற்கு நல்ல வாய்ப்பு கிடைத்தும் அந்த வாய்ப்பையும் சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் அங்கே எல்லாம் அழு மூஞ்சியாக இருந்துவிட்டு. இன்ஸ்டாகிராமில் விதவிதமான கவர்ச்சி போட்டோக்களை பதிவிட்டு வருகிறீர்களே என்றும், கவர்ச்சிக்கு மட்டும் தான் நீங்கள் லாயக்கா என்றும் கருத்துக்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.



Click it and Unblock the Notifications











