கம்பெனி ஆர்டிஸ்ட்.. 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டம்.. பிக் பாஸ் நிகழ்ச்சியை கழுவி ஊற்றிய கஸ்தூரி!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 5ன் ஒரு எபிசோடு கூட பார்க்காதவர்கள் யாராச்சும் இருக்கீங்களா கையை தூக்குங்க என செம கிண்டலாக நடிகையும் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான கஸ்தூரி போட்டுள்ள ட்வீட் வைரலாகி வருகிறது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்டவர் நடிகை கஸ்தூரி.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதற்கு தனக்கு சம்பளமே கொடுக்கவில்லை என்றும் அவர் முன்னதாக ட்வீட் போட்டு விஜய் டிவியிடம் மீண்டும் முழு சம்பளத்தை பெற்றது குறிப்பிடத்தக்கது.

யாராச்சும் இருக்கீங்களா
இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒரு எபிசோடு கூட முழுசா பார்க்காத நபர் தன்னை போல யாராச்சும் இருக்கீங்களா என நடிகை கஸ்தூரி சனிக்கிழமை எபிசோடு ஓடிக் கொண்டிருக்கும் போதே ட்வீட் போட்டு இணையத்தில் வைரலாக்கினார்.

முதல் சீசனையே பார்க்கல
நடிகை கஸ்தூரியின் ட்வீட்டை பார்த்த ஏகப்பட்ட நெட்டிசன்கள் நாங்கள் எல்லாம் முதல் சீசனில் இருந்தே அந்த பக்கம் போனதில்லை என கமெண்ட் போட்டு அவருக்கு கம்பெனி கொடுக்க ஆரம்பித்து விட்டனர். மேலும், சில நெட்டிசன்கள் அது வெறும் ஸ்க்ரிப்டட் ஷோ என்றும் அதில் ரியாலிட்டி இல்லை என்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியை விமர்சித்துள்ளனர்.

100 நாள் வேலை
100 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் தாக்குபிடித்து இருக்கும் போட்டியாளர் தான் இந்த பிக் பாஸ் டைட்டிலை வெல்வார் எனும் நிலையில், அதனை கலாய்க்கும் விதமாக #100naal_velaivaipputhittam என்பதை போட்டு நடிகை கஸ்தூரி நல்லாவே ட்ரோல் செய்துள்ளார்.

கம்பெனி ஆர்டிஸ்ட்
மேலும், #StarVijayTV, #companyArtists உள்ளிட்ட ஹாஷ்டேக்குகளையும் தனது ட்வீட்டில் போட்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பலரும் விஜய் டிவியின் கம்பெனி ஆர்டிஸ்ட் என்பதை கூறியுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களிலும், ரியாலிட்டி ஷோக்களிலும் நடித்தவர்களையே வேறு வழியில்லாமல் இந்த நிகழ்ச்சியில் பிடித்துப் போட்டு ஷோ நடத்தி வருகின்றனர் என்கிற குற்றச்சாட்டு நீண்ட காலமாகவே உள்ளது.

முன்னாள் போட்டியாளர்
பிக் பாஸ் நிகழ்ச்சியையும் விஜய் டிவியையும் விடாமல் கலாய்த்து வரும் நடிகை கஸ்தூரியும் பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்டவர் என்பதால், சில நெட்டிசன்கள் நீங்களும் முன்னாள் போட்டியாளர் தானே என கேள்விகளை எழுப்ப அதற்கு நான் சம்பளம் வாங்கி விட்டேன் என கூலாக பதில் அளித்து வருகிறார் கஸ்தூரி.


Click it and Unblock the Notifications











