'அவருடன் நான் சண்டை போட்டிருக்கக் கூடாது'.. கடும் மனவேதனையில் பிக் பாஸ் பிரபலம்!

ராகுலுடன் தான் சண்டை போட்டிருக்க கூடாது என தெலுங்கு பிக் பாஸ் சீசன் 3 போட்டியாளர் புனர்நவி தெரிவித்துள்ளார்.

ஐதராபாத்: பிக் பாஸ் போட்டியாளர் ராகுலுடனான உறவு பற்றி முதல் முறையாக மனம் திறந்து பேசியுள்ளார் முன்னாள் போட்டியாளர் நடிகை புனர்நவி.

தமிழ் பிக் பாஸ் சீசன் 3 போட்டி மிகுந்த பரபரப்புடன் சென்ற வாரம் தான் முடிந்தது. ஆனால் தெலுங்கு பிக் பாஸ் சீசன் 3 போட்டி இன்னமும் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த போட்டியை தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா தொகுத்து வழங்குகிறார்.

17 போட்டியாளர்களுடன்ஆரம்பித்த இந்த போட்டியில் இப்போது 7 போட்டியாளர்கள் மிச்சம் உள்ளனர். இவர்களில் கடந்த வாரம் வெளியேறிய போட்டியாளர் புனர்நவி பூபாலம். இவர் உள்ளே இருந்தபோது, பாடகர் ராகுல் சில்பிகஞ்சுடன் நெருக்கமாக பழகினார். முதலில் சதா சண்டை போட்டுக்கொண்டிருந்த இருவரும் ஒருகட்டத்தில் நெருங்கிய நண்பர்களாகிவிட்டனர்.

புனர்நவி - ராகுல்

புனர்நவி - ராகுல்

புனர்நவியும், ராகுலும் காதலிப்பதாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டது. தமிழ் பிக் பாஸ் போட்டியை போல் இவர்களுக்கும் ஆர்மி எல்லாம் செயல்பட்டு வருகிறது. கிட்டதட்ட ஷெரின் - தர்ஷன் ரேஞ்சுக்கு புனர்நவி, ராகுலை வைத்து நெட்டிசன்கள் டிவீட்டி வந்தனர்.

புனர்நவி பேட்டி

புனர்நவி பேட்டி

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய புனர்நவி, ராகுல் உடனான உறவு குறித்து முதல் முறையாக மனம் திறந்து பேசியுள்ளார். " பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற முதல் சில வாரங்கள் எனக்கு மிகவும் அசவுகரியமாக இருந்தது. இதனால் ராகுல் உள்ளிட்டோருடன் சண்டை போட்டேன். ஆனால் அதற்காக இப்போது வருந்துகிறேன்", என புனர்நவி கூறியுள்ளார்.

வருந்துகிறேன்

வருந்துகிறேன்

மேலும், "ராகுலும் நானும் நல்ல நண்பர்கள். நான் அவருடன் சண்டை போட்டிருக்கக் கூடாது. எனக்கும், ராகுலுக்கும் இடையில் உள்ளது ஒரு தூய்மையான நட்பு மட்டுமே. என்னிடம் இருந்து தள்ளி இருக்கும்படி ராகுலிடம் பலமுறை கூறியுள்ளேன். ஏனென்றால் வெளியில் உள்ளவர்கள் எங்கள் உறவை எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்பது தெரியாதல்லவா? அதனால் தான் எச்சரிக்கையாக இருந்தேன்", என புனர்நவி தெரிவித்துள்ளார்.

ஏழு போட்டியாளர்கள்

ஏழு போட்டியாளர்கள்

பிக் பாஸ் தெலுங்கு 3 நிகழ்ச்சி 75 நாட்களை கடந்துள்ளது. இந்த போட்டியில் இருந்து இதுவரை புனர்நவி உள்பட 10 பேர் எவிக்ட் செய்யப்பட்டுள்ளனர். ராகுல் சில்பிகஞ், போலியான எவிக்ஷன் மூலம் சீக்ரெட் ரூமில் தங்கவைக்கப்பட்டு மீண்டும் வீட்டிற்குள் அனுப்பப்பட்டார். பாபா பாஸ்கர், ஸ்ரீமுகி, சிவ ஜோதி உள்ளிட்ட ஏழு பேர் இப்போது கேமில் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X