41 வயதான பிக் பாஸ் நடிகை.. கோவாவுக்கு சூட்டிங் சென்ற இடத்தில் திடீர் மரணம்.. சோகத்தில் திரையுலகம்

கோவா: பிக் பாஸ் பிரபலமும் பாஜக கட்சியை சேர்ந்தவருமான சோனாலி போகட் கோவாவுக்கு சூட்டிங் சென்ற இடத்தில் திடீரென உயிரிழந்தது ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

Recommended Video

Namitha | இரட்டை குழந்தைகளுடன் கோவிலில் வலம் வந்த Namitha *Celebrity

சல்மான் கான் தொகுத்து வழங்கிய இந்தி பிக் பாஸ் சீசன் 14ல் போட்டியாளராக பங்கு பெற்றவர் சோனாலி போகட்.

மாரடைப்பு காரணமாக இவர் மரணமடைந்ததாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

பிக் பாஸ் பிரபலம்

பிக் பாஸ் பிரபலம்

இந்தி டிவி சீரியலான Ek Maa Jo Laakhon Ke Liye Bani Amma தொடர் மூலம் 2016ல் நடிகையாக அறிமுகமானவர் சோனாலி. நடிகையும் அரசியல்வாதியுமான சோனாலி போகட் பிக் பாஸ் சீசன் 14ல் வைல்ட் கார்டு போட்டியாளராக பங்கேற்றார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கிடைத்தனர். சல்மான் கான் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடும் போட்டியாளராக மற்ற கன்டெஸ்டண்ட்களுக்கு டஃப் கொடுத்தார் சோனாலி.

பாஜக தலைவர்

பாஜக தலைவர்

ஹரியானாவை சேர்ந்த சோனாலி போகட்டுக்கு அரசியலிலும் அதிக ஆர்வம் உண்டு. கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குல்தீப் பிஷ்னாய் என்பவருடன் போட்டிக் கண்டார். சமீபத்தில், குல்தீப் பிஷ்னாய் பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. பாஜகவின் மகிளா மோர்ச் தலைவராகவும் செயல்பட்டு வந்தார் சோனாலி.

திடீர் மரணம்

திடீர் மரணம்

41 வயதான சோனாலி போகட் சூட்டிங்கிற்காக கோவாவுக்கு சென்ற நிலையில், ஆகஸ்ட் 22ம் தேதி இரவு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட் நடிகர்கள், சக பிக் பாஸ் போட்டியாளர்கள் உள்ளிட்ட பலரும் அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நைட் பார்ட்டி தான் காரணமா

நைட் பார்ட்டி தான் காரணமா

கோவாவுக்கு சூட்டிங் சென்ற இடத்தில் ஆகஸ்ட் 22ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு பார்ட்டிக்கு சென்று வந்த அவர், தனது அறைக்கு வந்து படுத்துள்ளார். பின்னர், உடல் நிலை சரியில்லாமல் போனதால், உடனடியாக அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் அவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

கணவர் மர்ம மரணம்

கணவர் மர்ம மரணம்

கடந்த 2016ம் ஆண்டு 42 வயதான நிலையில், சோனாலியின் கணவர் சஞ்சய் போகட் அவர்களது பண்ணை வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது சோனாலியை பெரிதும் பாதித்தது. சோனாலிக்கு யசோதரா போகட் எனும் ஒரு மகள் உள்ளார். சோனாலியின் குடும்பத்தார் ஹரியானாவில் இருந்து கோவாவுக்கு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X