புல்லட்டை விட பேலட் வலிமையானது.. பிக் பாஸ் பிரபலங்களும் ஓட்டுப் போட்டுட்டாங்க.. நீங்க?
சென்னை: பிக் பாஸ் தமிழ் 4 சீசனில் போட்டியாளர்களாக கலந்து கொண்ட ஆரி அர்ஜுனன், ரம்யா பாண்டியன் மற்றும் பாலாஜி முருகதாஸ் உள்ளிட்டோரும் தங்களது வாக்குகளை செலுத்தி உள்ளனர்.
Recommended Video
வாக்களித்து விட்டு வந்த நடிகர் ஆரி அர்ஜுனன் பதிவிட்ட ட்வீட் மற்றும் பாலாஜி முருகதாஸ் பதிவிட்ட ட்வீட்டும் வைரலாகி வருகிறது.
தங்களது ரசிகர்களையும் கட்டாயமாக வாக்களிக்க வேண்டும் என்றும் இருவரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

எலியும் பூனையுமாக
பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் விக்ரம் வேதா போல எலியும் பூனையுமாக சண்டை போட்டுக் கொண்டே இறுதியில் முதல் இரு இடங்களையும் தட்டிச் சென்ற ஆரி அர்ஜுனன் மற்றும் பாலாஜி முருகதாஸ் ஆகிய இருவரும் தங்களது வாக்குகளை செலுத்தி உள்ளனர்.

நான் செய்து விட்டேன்
"என் ஜனநாயக கடமையை நான் செய்து விட்டேன். நீங்கள்..... நீங்கள் எனக்கு அளித்த வாக்கு என் வாழ்க்கையை மாற்றியிருக்கிறது. இந்தத் தேர்தலில் நாம் அளிக்கப்போகும் 100 சதவீத வாக்கு நம் தமிழகத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும். 100 சதவிகிதம் வாக்களிப்போம் ஜனநாயக கடமையை ஆற்றுவோம்" என பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரி ட்வீட் போட்டுள்ளார்.

மறக்காம ஓட்டு போடவும்
பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் டிரெண்ட் செட்டராக இருந்து ஏகப்பட்ட ரசிகைகளின் மனங்களை கவர்ந்த பாலாஜி முருகதாஸும் தனது வாக்கினை செலுத்தி உள்ளார். மேலும், ஓட்டுப் போட்ட பிறகு எடுத்த போட்டோவை ஷேர் செய்த அவர், மறக்காம ஓட்டு போடவும் என்றும் ரசிகர்களை கேட்டுக் கொண்டார்.

குடும்பத்துடன் ஓட்டுப் போட்ட ரம்யா
நடிகையும் பிக் பாஸ் பிரபலமுமான ரம்யா பாண்டியன் தனது அம்மா மற்றும் அக்காவுடன் ஓட்டுப் போட்ட பிறகு எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். மக்கள் அனைவரும் ஓட்டுப் போட வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

புல்லட்டை விட
கத்தியின் முனையை விட பேனா முனை கூர்மையானது எனும் பழமொழிக்கு நிகராக புல்லட்டை விட பேலட் வலுவானது என்கிற ஆபிரகாம் லிங்கன் கருத்தை கேப்ஷனாக போட்டு நடிகை ரம்யா பாண்டியன் தனது வாக்கினை செலுத்தியுள்ளார். அவரது புகைப்படத்திற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கமெண்ட்டுகளையும் லைக்குகளையும் பறக்கவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











