பீஸ்ட் பட கிளைமேக்ஸ் பற்றி பதிவு.. மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பிக்பாஸ் பிரபலம்.. ஏன் இப்படி?

சென்னை: பீஸ்ட் படத்தின் கிளைமேக்ஸ் பார்த்து விட்டு ட்வீட் போட்டது போல பில்டப் பண்ண பிக் பாஸ் பிரபலத்தை விஜய் ரசிகர்கள் பங்கமாக வச்சு செய்து வருகின்றனர்.

சமீபத்தில் தான் பீஸ்ட் படத்திற்கு தணிக்கை செய்யப்பட்டு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது.

பீஸ்ட் படம் வரும் ஏப்ரல் 13ம் தேதி ரிலீசாகும் என சன் பிக்சர்ஸ் இன்று அதிகாரப்பூர்வ அப்டேட்டை வெளியிட்டது.

புதன்கிழமை ரிலீஸ்

புதன்கிழமை ரிலீஸ்

வெள்ளிக்கிழமை புதிய படங்கள் வெளியான நிலை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மாறி வியாழக்கிழமை படத்தை ரிலீஸ் பண்ண தொடங்கினர். இந்நிலையில், விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் புதன்கிழமையே வெளியாகப் போகிறது என்பது ஒட்டுமொத்த திரையுலகின் கவனத்தையே கவர்ந்திருக்கிறது. பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் 13ம் தேதி வெளியாவதை சன் பிக்சர்ஸ் நிறுவனமும் இன்று உறுதி செய்துவிட்டது.

வசூல் பிளான்

வசூல் பிளான்

விஜய் படம் ரிலீசாகும் நிலையில் எப்படியாவது தளபதி ரசிகர்கள் ஷோவை ஹவுஸ்ஃபுல் ஆக்கி விடுவார்கள். அதற்கு அடுத்த நாள் ஏப்ரல் 14 விடுமுறை நாள் என்பதால் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் என அரங்கை ஹவுஸ்ஃபுல் ஆக்கி விடுவார்கள். மேலும், முதல் வாரத்திலேயே புதன், வியாழன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு என ஓடினாலே பெரும் வசூலை ஈட்டி விடலாம் என்கிற வசூல் பிளான் உடனே இந்த ரிலீஸ் தேதி ஃபிக்ஸ் செய்யப்பட்டு இருப்பதாக பலரும் தெரிவித்து வருகின்றனர்.

பீஸ்ட் கிளைமேக்ஸ் ஃபைட்

பீஸ்ட் கிளைமேக்ஸ் ஃபைட்

இது ஒரு புறமிருக்க மற்றொரு புறம் பீஸ்ட் படத்தின் கிளைமேக்ஸை பார்த்து விட்டது போல பிக் பாஸ் பிரபலம் அபிஷேக் ராஜா போட்டுள்ள ஒரு ட்வீட்டை பார்த்து கடுப்பான விஜய் ரசிகர்கள் அவரை துவம்சம் செய்து வருகின்றனர். பீஸ்ட் படத்தின் கிளைமேக்ஸ் சண்டை அதன் டெக்னிக்கல் டீம் செய்துள்ள சம்பவத்திற்காக பேசப்படும் என அபிஷேக் ராஜா பதிவிட்டுள்ளார்.

நீ கொஞ்சம் மூடு

நீ கொஞ்சம் மூடு

பிக் பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்து கொண்டு குறைவான ஓட்டுக்களுடன் இரு முறை வெளியேற்றப்பட்ட அபிஷேக் ராஜா மீண்டும் தனது சினிமா விமர்சனம் மற்றும் அப்டேட் கொடுக்கும் வேலையை ஆரம்பித்துள்ளார். இந்நிலையில், பீஸ்ட் படத்தின் புரமோஷன் பணிகளில் இறங்கி உள்ள அவர் ட்வீட் போட்டுள்ள நிலையில், "நாங்க படம் வரும்போது பார்த்துக்குறோம்.. நீ கொஞ்சம் மூடு" என போட்டு விஜய் ரசிகர்கள் பங்கம் பண்ணி உள்ளனர்.

நீ ஒண்ணும் சொல்ல வேண்டாம்

நீ ஒண்ணும் சொல்ல வேண்டாம்

படம் வந்ததும் பார்த்துட்டு நாங்களே சொல்லிக்கிறோம்.. நீ ஒண்ணும் சொல்ல வேண்டாம் என போட்டோ மீம்களாக போட்டு துவைத்து எடுத்து வருகின்றனர். படம் ரிலீசாவதற்கு முன்னதாக இப்படி பில்டப் கொடுப்பது. படம் வந்ததும் மோசமாக விமர்சிப்பது. இதையே வேலையாக வச்சுருக்கான் என்றும் விளாசி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X