பிக்பாஸ் கிராண்ட் ஃபினாலேவில் கவின்.. டிரெண்டாகும் #Kavin.. கொண்டாடும் ரசிகர்கள்!

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் பிக் டே இன்று, ஒட்டுமொத்த ரசிகர்களும் கடந்த மூன்று மாதங்களாக ஆவலோடு காத்திருந்த கிராண்ட் ஃபினாலே இன்று மாலை 6 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 12 மணிக்கு நிறைவடைகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினேலேவில் ஏற்கனவே முகேன் ராவ் வந்துள்ளார் என்பது புகைப்படங்களுடன் லீக்கான நிலையில், தற்போது, முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர் மற்றும் நடிகரான கவின் பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலேவில் கலந்து கொள்ளப் போவதாக தகவல்கள் வைரலாகி உள்ளன.

#Kavin என்ற ஹாஷ்டேக்கை அவரது ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

ஷூட்டிங் ஆரம்பம்

ஷூட்டிங் ஆரம்பம்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதிக்கட்ட கிராண்ட் ஃபினாலே ஷூட்டிங் தற்போது நடந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மாலை 6 மணியுடன் ஷூட்டிங் முடிய உள்ளதாம். பிக் பாஸ் டைட்டில் வின்னர் யார் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இன்னும் சற்று நேரத்தில் லீக் ஆகிவிடும்.

பிக் பாஸ் கிங்

பிக் பாஸ் கிங்

இந்த சீசனில் ஆரம்பத்தில் சும்மா இருந்த ஆரியை மற்ற ஹவுஸ்மேட்கள் சீண்டிவிட்டு, சிங்கமாக மாற்றி விட்டனர். மொத்தம் 23 கோடி வாக்குகளுடன் பிக் பாஸ் டைட்டிலை ஆரி அர்ஜுனன் வெற்றி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏகப்பட்ட கருத்துக் கணிப்புகள் என எல்லாவற்றிலும் ஆரியின் ஓட்டுக்கும் மற்ற ஹவுஸ்மேட்களின் மொத்த ஓட்டுக்கும் ஏணி வைத்தால் கூட எட்டாத அளவுக்கு உள்ளதாக கூறி வருகின்றனர்.

கிராண்ட் ஃபினாலேவில் கவின்

கிராண்ட் ஃபினாலேவில் கவின்

பிக் பாஸ் ரசிகர்களால் எப்போதுமே மறக்க முடியாத சீசன் என்றால் அது பிக் பாஸ் தமிழ் சீசன் 3 தான். அதிலும், கவின் மற்றும் லாஸ்லியாவின் ரசிகர்கள் இந்த சீசனிலும் ஏகப்பட்ட முறை ட்விட்டரில் டிரெண்ட் செய்தது குறிப்பிடத்தக்கது. இன்றைய கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியிலும் கவின் கலந்து கொள்கிறார் என்கிற தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

தெறிக்கும் டிரெண்டிங்

தெறிக்கும் டிரெண்டிங்

அடுத்த சீசனுக்கு பாலாஜி முருகதாஸுக்கு மக்கள் மத்தியில் இந்த அளவுக்கு கிரேஸ் இருக்குமா? என்பது தெரியாது. ஆனால், இந்த வருஷம் மட்டுமல்ல இன்னும் எத்தனை வருஷம் ஆனாலும், பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் கவினுக்கு வேற லெவல் கிரேஸ் இருப்பது நிச்சயம். #Kavin என்ற ஹாஷ்டேக்கை ட்விட்டரில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

உங்களை பார்க்க வரலை

பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலேவில் கவின் என்ட்ரி இருக்கு என அறிந்ததும் அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில், போட்டோக்கள், மீம்கள், மாஷ் அப்கள் என ஏகப்பட்டத்தை போட்டு வெறித்தனமாக கிராண்ட் ஃபினாலேவை காண ரெடியாகி வருகின்றனர். உங்களை பார்க்க வரலை.. கவினை பார்க்க வந்தேன் என்கிற மாஷ் அப் வேற லெவல் மாஸ்.

லிஃப்ட் பட புரமோஷன்

லிஃப்ட் பட புரமோஷன்

முகேன் ராவ் தனது வெற்றி படத்தின் புரமோஷனை பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலேவில் செய்துள்ளார் என்கிற தகவல்கள் கசிந்த நிலையில், அடுத்ததாக பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலேவில் சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுக்கவுள்ள நடிகர் கவின் தனது லிஃப்ட் பட புரமோஷனையும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

லாஸ்லியா மிஸ்சிங்

லாஸ்லியா மிஸ்சிங்

கவின் பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலேவில் கலந்து கொள்கிறார் என்றதும், லாஸ்லியா ரசிகர்கள் நடிகை லாஸ்லியாவை ரொம்பவே மிஸ் செய்கின்றனர். அவரும் பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலேவுக்கு வந்திருந்தால் இன்னமும் நல்லா இருக்கும். ஆரியுடன் லாஸ்லியா நடிக்கும் புரமோஷனையும் சேர்த்தே செய்திருக்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X