திருமணமாகி ஒரு மாசம் தான் ஆகுது.. தற்கொலைக்கு முயன்ற பிக் பாஸ் பிரபலம்.. கணவர் தான் காரணமா?
பெங்களூரு: கன்னட பிக் பாஸ் சீசன் 7ல் போட்டியாளராக கலந்து கொண்ட நடிகை சைத்ரா கொட்டூர் திடீரென தற்கொலைக்கு முயன்ற விவாகரம் கன்னட திரையுலகில் மிகப்பெரிய பரபரப்பை கிளப்பி உள்ளது.
கடந்த மாதம் தான் நாகார்ஜுனா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், திடீரென தற்கொலை முயற்சிக்கு ஏன் தள்ளப்பட்டார் என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

தற்கொலை முயற்சி
கர்நாடகாவின் கோலாரில் வசித்து வரும் நடிகை சைத்ரா கொட்டூர் நேற்று (ஏப்ரல் 8) தனது வீட்டில் பினாயில் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மருத்துவமனைக்கு அவரை அழைத்து சென்று சிகிச்சை அளித்ததில் உயிர் பிழைத்துள்ளார். பிக் பாஸ் சீசன் 7ல் கலந்து கொண்டு பிரபலமான இவரது தற்கொலை முயற்சி கன்னட திரையுலகில் அதிர்ச்சியை கிளப்பி உள்ளது.

பிக் பாஸ் பிரபலம்
கன்னட டிவி தொடர்களுக்கு ஸ்க்ரிப்ட் ரைட்டராக பணியாற்றி வந்த சைத்ரா கொட்டூர் ஹரிபிரியாவின் சுஜித்ராவில் துணை நடிகையாக நடித்தார். அதன் பின்னர் கிச்சா சுதீப் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் கன்னடா சீசன் 7ல் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

கடந்த மாதம் திருமணம்
கடந்த மாதம் தான் மாண்டியாவை சேர்ந்த தொழிலதிபர் நாகார்ஜுனா என்பவருடன் இவருக்கு விநாயகர் கோயிலில் திருமணம் நடைபெற்றது. அதன் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகின. ஏகப்பட்ட ரசிகர்களும், பிரபலங்களும் வாழ்த்தினர். இந்நிலையில், திடீரென சைத்ரா தற்கொலை முயற்சி செய்துள்ளது பலரையும் பதற வைத்துள்ளது.

கட்டாய கல்யாணம்
நாகார்ஜுனாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்று கூறப்படும் நிலையில், நாகார்ஜுனா மற்றும் அவரது குடும்பத்தினர் சைத்ரா கட்டாயப்படுத்தி சிலரை வைத்து மிரட்டித் தான் தன்னை திருமணம் செய்து கொண்டார் என்று போலீஸ் விசாரணையில் கூறியுள்ளதாகவும், இருவரும் சேர்ந்து வாழவில்லை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

போலீசார் விசாரணை
இந்த விவகாரம் தொடர்பாக இரு வீட்டாரிடமும் கோலார் போலீசாஅர் விசாரணை நடத்தி வருகின்றனர். நாகார்ஜுனாவின் வாக்குமூலம் மற்றும் சைத்ராவின் வாக்குமூலத்தையும் பெற்ற பின்னர் தான் இந்த விவாகாரம் தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











