குண்டா இருக்கேன்னு கலாய்ச்சாங்க.. இப்போ 12 கிலோ எடையை குறைச்சு தெறிக்கவிடும் பிக்பாஸ் பிரபலம்!
மும்பை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலம் ஒருவரை ஓவரா குண்டா இருக்கீங்கன்னு ரசிகர்கள் மற்றும் சக போட்டியாளர்கள் கலாய்த்த நிலையில், இந்த லாக்டவுனில் சுமார் 12 கிலோ எடையை குறைத்து சிக்கென ஸ்லிம் ஆகி உள்ளார்.
சல்மான் கான் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் இந்தி சீசன் 13ல் போட்டியாளராக கலந்து கொண்டார் நடிகை ஷெனாஸ் கில்.
பஞ்சாபி நடிகையான இவர் சில பஞ்சாபி மொழி படங்களிலும் டிவி ஷோக்களிலும் நடித்துள்ளார்.

செம போட்டியாளர்
கடந்த ஆண்டு பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் இந்தி சீசன் 13ல் போட்டியாளராக கலந்து கொண்டார் நடிகை ஷெனாஸ் கில். குண்டாக இருந்தாலும், தனது திறமையால் மத்த போட்டியாளர்களுக்கு கடும் டஃப் போட்டியை இறுதி வரை கொடுத்து வந்தார். நடிகர் சல்மான் கானிடம் பல முறை பாராட்டுக்களையும் பெற்றார்.

குண்டா இருக்கேன்னு
பிக் பாஸ் சீசன் 13ல் கலந்து கொண்ட நடிகை ஷெனாஸை ரசிகர்களும் சக போட்டியாளர்களும் குண்டா இருக்கீங்கன்னு ரொம்பவே கிண்டல் செய்துள்ளனர். அவர் அதற்கெல்லாம் வெளியே வருத்தப்படாமல் இருந்தாலும், மனதுக்குள் மிகவும் வருத்தப்பட்டுள்ளார். இதனை எப்படியாவது மாற்றிக் காட்ட வேண்டும் என நினைத்த அவர், இந்த லாக்டவுனை அதற்காக பயன்படுத்திக் கொண்டார்.

12 கிலோ எடை குறைப்பு
கடந்த மார்ச் மாதம் லாக்டவுன் ஆரம்பிக்கும் போது 67 கிலோ எடை இருந்த நடிகை ஷெனாஸ் கில், கடந்த 5 மாதங்களாக தீவிர உடற்பயிற்சி மற்றும் டயட் மேற்கொண்டு தனது உடல் எடையை 12 கிலோ வரை குறைத்து ஸ்லிம் ஆகி உள்ளார். இப்போ வெறும் 55 கிலோ எடை உடன் தான் இருப்பதாக தெரிவித்துள்ள அவர், தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது ஹாட்டான ஸ்லிம் தோற்ற புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தி உள்ளார்.

என்ன டயட்
என் உடல் எடையை இப்படி குறைக்க நான் ஒன்றும் பெரிய டயட் எல்லாம் எடுக்கவில்லை என்றும், தினசரி மதியம் என்ன உணவு சாப்பிட்டேனோ அதனை பாதியாக பிரித்து வைத்து இரவும் அதே உணவை உட்கொண்டேன். அப்புறம் தேவையான உடற்பயிற்சி செய்தேன். இரண்டு ரொட்டிக்கு பசி யெடுத்தால், ஒரு ரொட்டி மட்டும் உண்பேன் இது தான் எனது டயட் பிளான் என கூலாக கூறுகிறார்.

குவியும் லைக்ஸ்
ஷெனாஸ் கில்லின் இந்த அட்டகாச உருமாற்றத்தை பார்த்த பிக் பாஸ் ரசிகர்கள் அவரது புகைப்படங்களுக்கு லைக்குகளை அள்ளி குவித்து வருகின்றனர். இப்போ தான் செம ஹாட்டா இருக்கீங்க, சீக்கிரமே ஏகப்பட்ட பாலிவுட் வாய்ப்புகள் உங்களுக்கு வந்து குவியும் என்று கமெண்ட்டுகளை தெறிக்க விடுகின்றனர்.
Recommended Video

யாரு நீங்க
சில ரசிகர்கள் அழகா குண்டா கொழுக்கு மொழுக்குன்னு இருந்த எங்க ஷெனாஸ் எங்கே என்றும், நீங்க யாரு அவங்களோட தங்கச்சியா என்றும் சிலர் கலாய்த்து வருகின்றனர். குண்டா இருந்தப்போ தான் அழகா இருந்தீங்க, ஏன் மத்தவங்களுக்காக உங்களை மாத்திக்கிட்டீங்க என்றும் சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











