Don't Miss!
- Finance
பொருளாதார ஆய்வறிக்கை வெளியானது.. இந்திய பொருளாதாரம் 6-6.8% வளர்ச்சி அடையும்,..!
- News
பத்திக்கிருச்சே.. இதுக்குன்னே தனி வீடு.. ராகினியிடம் கெஞ்சிய குடும்பம்.. பரிதாப கணவன்.. அலறிய ஆவடி
- Lifestyle
இந்த 4 அறிகுறிகள் உங்களுக்கு இருந்தா? இரத்த சர்க்கரையால் தீவிரமான நரம்பு பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்காம்!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles
கார் பைக்குகளில் இருப்பது போல ரயில் இன்ஜின்களிலும் கியர் இருக்குமா? இது எப்படிப் பயன்படுகிறது?
- Sports
"எங்களுக்கு நீங்க ஆர்டர் போடாதீங்க" பணிச்சுமை விவகாரம்.. பிசிசிஐ - ஐபிஎல் அணிகள் இடையே மோதல்- விவரம்
- Technology
ஒட்டுமொத்த பட்ஜெட் போன்களையும் பேக்கில் ஓடவிடப்போகும் OnePlus Nord 3.! இது தான் காரணமா?
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
வைரமுத்து வரிகளில்.. பிக் பாஸ் பிரபலம் நடனமாடிய நாட்படு தேறல் பாடல்.. நாளை ரிலீஸ்!
சென்னை: பாடலாசிரியர் வைரமுத்து நாட்படு தேறல் எனும் பெயரில் தனது கவிதைகளை ஆல்பம் பாடல்களாக மாற்றி வருகிறார்.
நாடுபடு தேறல் முதல் பாகமே முடிந்த நிலையில், நாட்படு தேறல் 2 ஆரம்பமாகி உள்ளது.
நாளை வெளியாகும் இந்த பாடலில் பிக் பாஸ் சீசன் 5ல் கலந்து கொண்ட அக்ஷரா ரெட்டி நடித்துள்ளார் அதன் முன்னோட்டம் தற்போது வெளியாகி உள்ளது.
மீண்டும் பைக் உடன் நடிகர் அஜித்.. நீண்ட தாடியுடன் செம மாஸ் லுக்.. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ!

வைரமுத்துவின் வரிகளில்
பாடலாசிரியர் வைரமுத்துவின் வரிகளில் உருவாகி உள்ள நாட்படு தேறல் பாடல் தொகுப்பு ஆல்பம் பாடல்களாக மாறி வருகின்றன. அனிகா சுரேந்திரன் உள்ளிட்ட பிரபலங்கள் முதல் சீசன் பாடலில் நடித்திருந்தனர். இந்நிலையில், நாட்படு தேறல் இரண்டாம் பாகத்திற்கான பணிகளை வைரமுத்து செய்து வருகிறார்.

பிக் பாஸ் பிரபலம்
பிக் பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்து கொண்டு வருணின் தோழியாக வலம் வந்தவர் நடிகை அக்ஷரா ரெட்டி. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அக்ஷரா ரெட்டி வருண் உடன் இணைந்து படம் பண்ணுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது வைரமுத்துவின் பாடலில் நடித்துள்ளார்.

முன்னோட்டம்
ரோஜாவை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த பாடலில் நடிகை அக்ஷரா ரெட்டி அழகு பதுமையாக நடித்துள்ளார். அதன் அழகான முன்னோட்ட வீடியோவை கவிஞர் வைரமுத்து தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து உள்ளார். ஏகப்பட்ட ரசிகர்கள் அந்த பாடலை பார்த்து அவரை பாராட்டி வருகின்றனர்.

க்ரீன் மேட்டில்
நாட்படு தேறல் இரண்டாவது பருவம் நாளை முதல் ஆரம்பிக்க உள்ள நிலையில், இந்த பாடல் முழுவதையும் அதன் இயக்குநர் க்ரீன் மேட் தொழில் நுட்பத்திலேயே உருவாக்கி உள்ளனர். க்ரீன் மேட்டில் அக்ஷரா ரெட்டி நடனமாட அதை அப்படியே சிஜியில் அழகான பேக்ரவுண்ட் இருக்கும் இடமாக மாற்றி அசத்தி உள்ளனர்.

நாளை ரிலீஸ்
இன்று இந்த பாடலின் முன்னோட்ட பாடல் வெளியாகி உள்ள நிலையில், நாளை ஏப்ரல் 17 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் வெளியாகிறது. இது தொடர்பான அறிவிப்பை வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.