துணிவு..வெல்வோம்..அஜித் படத்தில் நடிக்கிறார்களா இந்த பிக்பாஸ் பிரபலங்கள்?..அவர்களே போட்ட பதிவு!
சென்னை : அஜித் நடிக்கும் துணிவு படத்தில் பிக் பாஸ் பிரபலங்கள் இணைய உள்ளதாக அதிகாரப்பூர்வமான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
நேர்கொண்ட பார்வை, வலிமை படத்திற்கு பிறகு அஜித்குமார் 3வது முறையாக ஹெச்.வினோத்துடன் கைகோர்த்துள்ளார்.
இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக அசுரன் படத்தில் தனுஷூக்கு ஜோடியாக நடித்த மஞ்சு வாரியர் நடித்து வருகிறார். அவர் தவிர சார்பட்டா பரம்பரை படத்தில் கலக்கிய ஜான் கொக்கென், வீரா, யோகிபாபு, மகாநதி சங்கர் போன்றோர் படத்தில் கமிட்டாகி உள்ளனர்.

துணிவு
க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகி வரும் இத்திரைப்படத்திற்கு துணிவு என பெயர் வைக்கப்பட்டுள்ளது. பஞ்சாப்பில் 1987ம் ஆண்டு நடந்த வங்கி கொள்ளையை அடிப்படையாக வைத்து இத்திரைப்படம் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த கொள்ளை சம்பவத்தில் 13 பேரை போலீசார் கைது செய்தனர். அந்த கொள்ளையர்கள் போலீசை போல உடையணிந்து பேங்க் ஊழியர்களை மிரட்டி 6 கோடியை கொள்ளை அடித்து சென்றனர்.

இதுதான் கதை
2019ம் ஆண்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி 13 பேரில் 9 பேருக்கு தண்டனை வழங்கியது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொள்ளையில் மூளையாக செயல்பட்டவர் லாப் சிங் தான். இந்த லாப் சிங் கதாபாத்திரத்தில் தான் அஜித் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. துணிவு படத்தில் அஜித் நெகடிவ் ரோலில் நடிப்பதாக தகவல் வெளியாகி வருவதால், மீண்டும் ஒரு மங்காத்தா படத்தை காண ரசிகர்கள் இப்போதே தயாராகிவிட்டார்கள்.

‘V’ சென்டிமெண்ட்
இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் ஐதராபாத்தில் சிறிய பூஜையுடன் தொடங்கியது. ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் செட் போடப்பட்டு அதில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. வழக்கமாக அஜித்தின் படத்திற்கு வீரம், விஸ்வாசம், விவேகம், வலிமை, என 'V' சென்டிமெண்ட் தலைப்பில் பெயர் வைக்கப்பட்டு வந்த நிலையில் இப்படத்திற்கு தற்போது துணிவு என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

பிக்பாஸ் பிரபலங்கள்
இந்நிலையில், பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் மூலம், அமீர், பாவனி மற்றும் சிபி சக்கரவர்த்தி மூவரும் துணிவு திரைப்படத்தில் இணைந்துள்ளதாக அதிகாரபூர்வமான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. பாவனி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். விமானத்தில் மூவரும் பயணம் செய்யும் போட்டோவை பகிர்ந்து இரண்டு நாட்கள் முன்னர் "துணிவு" படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக பயணம் மேற்கொள்ளும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











