உன்ன பார்க்கமலே போயிருந்தா நான் என்ன ஆகிருப்பேன்.. கணவரை நினைத்து உருகும் அனிதா சம்பத்!

சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அனிதா சம்பத், திருமண நாளில் தனது கணவரை நினைத்து உருக்கமான பதிவினை பகிர்ந்துள்ளார்.

Recommended Video

Bigg Boss Ultimate Day 2:பணமும் வேணும் TITLE-ம் வேணும் முடிவோடு வந்துள்ள Thamarai Selvi

செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத், அழகான தமிழ் உச்சரிப்பால் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இவர் செய்தி வாசிப்பாளராக பல ஆண்டுகள் பணியாற்றி இருந்தாலும், இவரை மக்கள் மத்தியில் பிரபலமாக்கியது பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.

அனிதா சம்பத்

அனிதா சம்பத்

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர், பிபி ஜோடிகள் கலந்து கொண்ட அனிதா பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார். அதில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி பின்னர் பாதியிலேயே வெளியேறினார். தற்போது, அனிதா படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில், வெளிநாட்டில் இருக்கும் அனிதா சம்பத், திருமண நாளில் தனது கணவரை நினைத்து உருக்கமான பதிவினை பகிர்ந்துள்ளார்.

எங்கயோ பிறந்து எங்கயோ வளர்ந்து

எங்கயோ பிறந்து எங்கயோ வளர்ந்து

அதில், "முக்கியமான நாள்ல ஒன்னா இருக்க முடியாம வேற நாட்டுல உட்கார்ந்து இத எழுதுவேன்னு நெனச்சே பாக்கல..எங்கயோ பிறந்து எங்கயோ வளர்ந்து, சந்திச்சு, காதலிச்சு, கரம் பிடிச்சு வாழுற எத்தனையோ பேருல, வேகு சில பேரோட அன்பு கதைகள்ல நம்மளுதும் ஒன்னு. வாழ்க்கை எப்படி புரட்டிப்போட்டாலும், வாழ்க்கை எத்தனை முறை கீழே தள்ளி விட்டாலும், வாழ்க்கை மனச சுக்குநூறா ஒடச்சி போட்டாலும், நாம இல்லாமயே போயிட்டா இவ்ளோ பிரச்னை இல்லயேனு வாழ்க்கையோட விளிம்புல நின்னு மோசமா என்னை யோசிக்க வச்சாலும்,

எனக்கு கெடச்ச வரம்

எனக்கு கெடச்ச வரம்

கன்னுக்குட்டி.... அடச்சீ... என்னடா..இதுக்கெல்லாம் இவ்ளோ அழுதுக்குட்டு..னு மொத்தமா அனச்சி கதகதப்போட சேர்த்து நான் வாழ நீ கொடுக்கும் நம்பிக்கை...அடுத்த நாள் வாழ்க்கை மாறிடும்ங்குற நம்பிக்கைய முத்தத்தால கொடுக்கும் உன் அன்பு, கண்ணீர துடைக்க எப்பவும் தயாரா இருக்க உன் கைகள், இதெல்லாம் எனக்கு கெடச்ச வரம்.

ஐ லவ் யூ பப்பு

ஐ லவ் யூ பப்பு

2016ல zeroல இருந்த எனக்கு ஹாஸ்டல் பீஸ் கட்டி, ஹாஸ்டல்ல சமைக்க கரண்ட் அடுப்பு, பாத்திரம்னு வாங்கி கொடுத்து கஷ்டப்பட்ட, அனிதாக்கூட நின்ன காதலன் பிரபா தொடங்கி, கொஞ்ச கொஞ்சமா வளர்ந்து, புது வீடு வாங்கி கணவனா தொடருர பிரபா வரைக்கும் காதல்ல, அன்புல, நம்பிக்கையில ஒரு துளி மாற்றமும் இல்ல.. நெற்றியில் உன் முத்தத்தின் எச்சில் குளிரோடு அன்பைச்சொல்லும் உன் கண்களை பார்த்துக்கொண்டே கண்ணீர் துடைக்கும் உன் கரங்களை பிடித்துக்கொண்டே இறந்துவிட ஆசை... ஐ லவ் யூ பப்பு. கணவன் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் எப்பவும் சொல்றமாதிரி. உன்ன பார்க்கமலே போயிருந்தா நான் என்ன ஆகிருப்பேன் பப்பு என்று பதிவிட்டு இருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X