மறுபடியும் சென்டிமென்ட் படமா?... பிரபல நடிகருக்கு தங்கையாகும் அனிதா சம்பத் !
சென்னை : விமல் நடிக்கும் புதிய திரைப்படத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அனிதா சம்பத் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் பாண்டியராஜன், பாலசரவணன், தீபா, நேகா, வத்சன் வீரமணி, ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் .
உதய் புரொடக்சன்ஸ் மற்றும் மேஜிக் டச் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு காட்வின் இசையமைக்கிறார்.

விமல்
தமிழ் திரையுலகில் களவாணி, கேடி பில்லா கில்லாடி ரங்கா, மஞ்சப்பை, கலகலப்பு, தேசிங்கு ராஜா போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் விமல். அடுத்ததாக இவர் மார்ட்டின் நிர்மல் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

அண்ணன் தங்கை
குடும்ப உறவுகளை மையமாக வைத்து உருவாகி வரும் இத்திரைப்படத்தில், தன் தங்கைக்கு திருமணம் செய்து வைக்க போராடும் ஒரு அண்ணனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் விமலுக்கு தங்கையாக அனிதா சம்பத் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபலம்
பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் அனிதா சம்பத். இவர் முதன்முதலாக தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக தான் தன்னுடைய கேரியரை தொடங்கினார். செய்தி வாசித்ததன் மூலம் இவர் மக்கள் மத்தியில் தனக்கென ஓர் இடத்தைப்பிடித்தார்.

படங்களில் கமிட்
பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிபி ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கி டைட்டில் வின்னர் ஆனார். அனிதா சம்பத் தற்போது, அடுத்தடுத்து படங்களில் கமிட் பிஸியாக நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











