எல்லாருக்கும் கல்யாணம் ஆகிடுச்சு...புலம்பும் பிக்பாஸ் பிரபலம்
சென்னை : மாடலாக தனது வாழ்க்கையை துவக்கியவர் பாலாஜி முருகதாஸ். இவர் 2018 ல் டைசன் படத்தில் வில்லனாக நடித்து, சினிமாவிற்கு அறிமுகமானவர்.

தொடர்ந்து கரோலின் காமாட்சி, சிறுத்தை சிவா உள்ளிட்ட படங்களில் நடித்தார். இருந்தும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு எந்த படமும் ஓடவில்லை. 2020 ல் மியூசிக் வீடியோ ஒன்றிலும் நடித்தார்.
கடைசியாக விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 ல் போட்டியாளராக பங்கேற்றார். இந்த நிகழ்ச்சிக்க பிறகு புகழடைந்த பாலாஜி, தற்போது சில படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது லாக்டவுன் காரணமாக படப்பிடிப்புக்கள் நிறுத்தப்பட்டதால் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். இந்நிலையில் இன்று இன்ஸ்டாகிராமில் தான் டிவி பார்ப்பது போன்ற ஃபோட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அத்துடன், எனது நண்பர்கள் அனைவருக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். அதனால் நான் சோட்டா பீம் பார்ப்பதில் பிஸியாக இருக்கிறேன் என கேப்ஷன் பதிவிட்டுள்ளார்.
பாலாஜியின் இந்த புலம்பல் பதிவு தற்போது வைரலாகி வருகிறது. சில நாட்களுக்கு முன் நடிகர் சிம்பு இதே போன்று ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதுவும் தாறுமாறாக வைரலானது.


Click it and Unblock the Notifications











