தமிழ் சினிமாவின் முன்னணி டான்ஸ் மாஸ்டர்.. சாண்டியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

சென்னை: நடன இயக்குநர் சாண்டி இன்று தனது 37வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இந்நாளில், அவருக்கு இருக்கும் சொத்து எவ்வளவு என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாமா?

கலைஞர் டிவியில் ஒளிபரப்பான மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சியில் நடன இயக்குனராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.

Bigg Boss fame dance master Sandy Master net worth details

இதைத் தொடர்ந்து, விஜய் டிவியில் ஒளிபரப்பான கிங்ஸ் ஆஃப் டான்ஸ் சீசன் 2வில் நடுவராக மாறினார்.

சாண்டி மாஸ்டர்: சின்னத்திரையில் நடன இயக்குநராக வலம் வந்து கொண்டிருந்த சாண்டி, தண்ணில கண்டம், கெத்து போன்ற படங்களுக்கு நடனம் அமைத்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த காலா படத்தில் நடன இயக்குனராக பணியாற்றினார். தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல், தெலுங்கு, கன்னட படங்களிலும் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

சாண்டி அலப்பறை: இதன்பின், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற சாண்டி மாஸ்டர் நல்ல எண்டர்டெய்னராக இருந்தார். அந்த நிகழ்ச்சியில் கவின், முகேன் ராவுடன் சேர்ந்து கொண்டு ஏய் லாஸ்லியா.... நீ காஸ்லியா என பாட்டுப்பாடி அலப்பறை கொடுத்தார். அந்த நிகழ்ச்சியின் முடிவில் முகேன் ராவ் பிக் பாஸ் சீசன் 3 டைட்டிலை வென்றார். சாண்டி மாஸ்டர் ரன்னர் அப்பாக இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

ஹீரோவாக: தற்போது நேரம், பிரேம்,கோல்ட் போன்ற மாஸ் ஹிட் படத்தை இயக்கிய அல்போன்ஸ் புத்ரன் படத்தில் நடன இயக்குனர் சாண்டி ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த சில நாட்களாக தொடங்கி நடந்து வருகிறது. இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

சொத்து மதிப்பு: சாண்டி மாஸ்டர் ஒரு எபிசோடுக்கு ரூ. 50 ஆயிரம் ரூபாயை சம்பளமாக பெறுவதாக கூறப்படுகிறது. தற்போது சாண்டி ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடனம் அமைத்து வருவதால் அவரின் சம்பளம் கணிசமாக உயர்ந்துள்ளது. நடனம், நடிப்பு மற்றும் மாடலிங்கை பிரதான தொழிலாக வைத்திருக்கும் சாண்டி மாஸ்டர் பெரிதாக விலை உயர்ந்த காரோ,பைக்கோ வைத்திருக்கவில்லை என்றாலும், அவர் 7 கோடி ரூபாய் சொத்து வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X