கவினுக்கு வாழ்த்து சொன்ன தர்ஷன்.. லாஸ்லியா இன்னும் வாழ்த்து சொல்லலையா என கேட்கும் நெட்டிசன்ஸ்!

சென்னை: தளபதி விஜய்க்கு மட்டுமில்லைங்க அவரோட தீவிர ரசிகரான பிக் பாஸ் கவினுக்கும் இன்று தான் பிறந்தநாள்.

தனது 31வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வரும் நடிகர் கவினுக்கும் சோஷியல் மீடியாவில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

#HappyBirthdayKavin என்கிற ஹாஷ்டேக்கை போட்டு பிக் பாஸ் ரசிகர்கள் தெறிக்க விட்டு வருகின்றனர்.

90ஸ் கிட்

90ஸ் கிட்

1990ம் ஆண்டு ஜூன் 22ம் தேதி பிறந்த பக்கா 90ஸ் கிட் நம்ம கவின். விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி, பிக் பாஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான நம்ம லிஃப்ட் ஹீரோவுக்கு பலரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

தெறிக்கும் டிரெண்டிங்

தெறிக்கும் டிரெண்டிங்

#HappyBirthdayKavin என்கிற ஹாஷ்டேக்கை பிக் பாஸ் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர். நடிகர் கவினின் 31வது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களும், சினிமா பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். காமன் டிபிக்களும் வெளியிடப்பட்டு வைரலாகி வருகின்றன.

தர்ஷன் வாழ்த்து

தர்ஷன் வாழ்த்து

நடிகை லாஸ்லியாவுடன் கூகுள் குட்டப்பன் படத்தில் ஹீரோவாக நடித்து வரும் நடிகரும் பிக் பாஸ் பிரபலமுமான அந்த தர்ஷன் இல்லைங்க.. கனா படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷை ஒன் சைடாக காதலித்த "ஒத்தையடி பாதையிலே" தர்ஷன் தான் நடிகர் கவினுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார். தர்ஷனின் அந்த ட்வீட் தற்போது கவின் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Recommended Video

Shalu Shamu-விடம் Size பற்றி கேட்ட ரசிகர், தரமான பதில் கொடுத்த Shalu
லாஸ்லியா விஷ் பண்ணலையா

லாஸ்லியா விஷ் பண்ணலையா

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் கவினும் லாஸ்லியாவும் காதலித்து வந்தனர். இருவரது காதலக்கு லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் பிக் பாஸ் வீட்டிலேயே எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் இருவரும் சினிமாவில் படு பிசியாகி உள்ளனர். கவினின் பிறந்தநாளுக்கு லாஸ்லியா இன்னும் சமூக வலைதளத்தில் வாழ்த்து சொல்லாத நிலையில், லாஸ்லியா ஏதும் சொல்லலையா என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

லிஃப்ட் அப்டேட்

லிஃப்ட் அப்டேட்

கவினின் பிறந்தநாளை முன்னிட்டு கவின், அம்ரிதா நடித்துள்ள லிஃப்ட் படத்தின் அப்டேட் ஏதும் வெளியாகுமா என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் சிவகார்த்திகேயன் குரலில் வெளியான அந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் "இன்னா மயிலு" பாடல் வேற லெவலில் ஹிட் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Read more about: kavin losliya
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X