அறந்தாங்கி நிஷாவை படுக்க வைத்து வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் என்ன செய்றாரு பாருங்க.. இப்படி இருக்காரே
சென்னை: வாட்டர் மெலன் ஸ்டார் என்று தன்னைத்தானே சொல்லிக்கொண்டு திருந்த திவாகர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசனில் கலந்துகொண்டார். அங்கு சென்றும் தன்னை மாற்றிக்கொள்ளாமல் இஷ்டத்துக்கு அலப்பறையை கூட்டிய அவரை கிட்டத்தட்ட 40 நாட்களிலேயே எவிக்ட் செய்து வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள். வெளியே வந்த அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அது இது எது நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அறந்தாங்கி நிஷாவிடம் நடந்துகொண்ட விதம் முக சுளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மதுரையை சேர்ந்த பிசியோதெரபி மருத்துவர் திவாகர், தனக்கு தானே வாட்டர் மெலன் ஸ்டார் என்று பட்டம் சூட்டிக்கொண்டார். அதுமட்டுமின்றி தான் ஒரு நடிப்பு அரக்கன் என்றும் சூளுரைத்தார். ரீல்ஸ் செய்வது, நடிப்பு, நடனம் என்ற பெயரில் இஷ்டத்துக்கு குதிப்பது, ஓடுவது, ரியாக்ஷன் கொடுப்பது என ஏதேதோ செய்துகொண்டிருந்த அவர்; பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார்.
வலுத்த கண்டனங்கள்: அவரை பிக்பாஸ் வீட்டுக்குள் விட்டதுக்கு பலரும் கண்டனத்தை பதிவு செய்தார்கள். உண்மையாகவே உழைத்து உயர வேண்டும் என்று எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்களை பிக்பாஸுக்கு அழைத்திருந்தால்கூட ஏதோ ஒரு பயன் கிடைத்திருக்கும். இவர் மற்றவர்களை மட்டப்படுத்தியும், கோமாளித்தனமாக ஏதோ செய்துகொண்டிருக்கிறார். இவரை ஏன் அழைத்தார்கள் என்று ஓபனாகவே அடித்தார்கள்.

உள்ளே போயும் திருந்தல: பிக்பாஸ்வீட்டுக்குள் போகும்போதே அவரிடம் விஜய் சேதுபதி, வெளியே இருந்தது மாதிரி உள்ளேயும் இருக்காதீர்கள். இதை சரியாக பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்று அட்வைஸ் செய்துதான் அனுப்பி வைத்தார். ஆனால் அங்கே சென்ற அவரோ வீட்டுக்குள் இருக்கும் அத்தனை கேமராக்கள் முன்பும் ரீல்ஸ் செய்வதையே வேலையாக வைத்திருந்தார். மேலும் சக போட்டியாளர்களிடம் தான் ஒரு நடிப்பு அரக்கன் என தற்பெருமையாகவே பேசிவந்தது அனைவரையுமே இரிட்டேட் செய்தது.
எவிக்ட் ஆன திவாகர்: அதுமட்டுமின்றி யார் பேச வந்தாலும் எடுத்ததுமே உங்களுடைய தராதரம், தகுதி என்ன என பேசி கண்டனத்தை சம்பாதித்தார். விஜய் சேதுபதி சில வாரங்கள் கண்டித்தும் அவர் திருந்தியபாடில்லை. சூழல் இப்படி இருக்க கிட்டத்தட்ட 40 நாட்கள் கேமில் இருந்த திவாகர் அதிரடியாக எவிக்ட் செய்யப்பட்டார். வீட்டிலிருந்து வெளியே வந்த அவர் யூடியூப் சேனல்களுக்கு பேட்டிகள் கொடுத்துவருகிறார். இது ஒருபக்கம் இருக்க விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அது இது எது நிகழ்ச்சியிலும் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
முகம் சுளிக்க வைக்கும் செயல்: அங்கு வந்தும் நடிக்கிறேன் எனும் பெயரில் எதையோ செய்த அவர்; அறந்தாங்கி நிஷாவிடம் தன்னை போல் நடியுங்கள் என சொல்ல; அவரும் செய்தார். மேலும் அவரது காலில் விழ அறந்தாங்கி நிஷாவும் கீழே படுத்துவிட்டார். அப்போதும் நிஷாவின் காலை விடாமல் பிடித்துக்கொண்டே இருந்தார் திவாகர். இதனைப் பார்த்த ரசிகர்கள் இவரையெல்லாம் ஏன் இந்த நிகழ்ச்சிக்கு அழைத்து பெரிய ஆள் ஆக்குகிறார்கள். முகம் சுளிக்கும்படி நடந்துகொள்வதை நிறுத்தவே மாட்டேங்கிறாரே என்று விளாசிவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











