படுக்கைக்கு அழைத்த இயக்குநர்.. பரபரப்பு புகார் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. எப்போ தெரியுமா?

மும்பை: சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்டு சென்ற பிக் பாஸ் பிரபலத்தை தென்னிந்திய இயக்குநர் ஒருவர் படுக்கைக்கு அழைத்த சம்பவம் ரசிகர்களை ஷாக்காக்கி உள்ளது.

இந்தியில் சல்மான் கான் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் கட்டி உருண்டு புரண்டு மோதிக் கொள்ளும் காட்சிகள் எல்லாம் வைரலாக பலரது கவனமும் இந்தி பிக் பாஸ் சீசன் 15 பக்கம் திரும்பி உள்ளது.

அதில், போட்டியாளராக பங்கேற்றுள்ள பிரபல டிவி நடிகை டோனல் பிஸ்த் தான் கடந்த 2020ம் ஆண்டு தென்னிந்திய இயக்குநர் மீது பாலியல் புகார் அளித்தது குறித்து அளித்த பேட்டியை தற்போது ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

அடிதடி சண்டை

அடிதடி சண்டை

தமிழ் பிக் பாஸ் மாதிரி இல்லாமல் இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் 17 இளம் போட்டியாளர்களே பங்கேற்றுள்ளனர். அதிலும், சமீபத்தில் அவர்கள் ஒருவரை ஒருவர் காட்டு மிராண்டிகளை போல அடித்துக் கொண்டு உருண்டு புரண்டது ரசிகர்களை கதிகலங்க வைத்து அதன் டிஆர்பியை உச்சத்துக்கு கொண்டு சென்றது.

ரியா இல்லை

ரியா இல்லை

மறைந்த இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முன்னாள் காதலியான ரியா சக்கரவர்த்தி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போவதாக அங்குள்ள கருத்துக் கணிப்பு ஆசாமிகள் சொன்ன தகவலை அடுத்து அந்த நிகழ்ச்சிக்கு எதிரான டிரெண்டிங் களைகட்டியது. ஆனால், ரியா இந்த சீசனில் பங்கேற்கவில்லை.

டோனஸ் பிஸ்த்

டோனஸ் பிஸ்த்

கடந்த 5 ஆண்டுகளாக இந்தி ரசிகர்களை கவர்ந்து வரும் டிவி நடிகையான டோனல் பிஸ்த் பிக் பாஸ் சீசன் 15 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு தனது ஆக்டிவிட்டிகளால் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்து இழுத்து வருகிறார். இந்நிலையில், கடந்த ஆண்டு அவர் அளித்த பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது.

படுக்கைக்கு அழைத்தார்

படுக்கைக்கு அழைத்தார்

அந்த வீடியோ பேட்டியில் தென்னிந்திய இயக்குநர் ஒருவர் தனது படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக ஆடிஷன் நடத்தினார். அதில், ஆர்வமுடன் கலந்து கொண்ட என்னை தனியாக அழைத்து என்னுடன் ஒரு இரவு கழித்தால் உனக்கு இந்த படத்தில் ஹீரோயின் வாய்ப்பு கிடைக்கும் என்றார் என்றதும் நான் அப்படியே அதிர்ச்சி அடைந்தேன் என்றார்.

போலீசில் புகார்

போலீசில் புகார்

உடனடியாக அங்கிருந்து வெளியேறிய நான் அந்த இயக்குநர் குறித்து அப்பவே போலீசில் புகார் அளித்தேன் என்றும், சினிமாவில் நடிக்க வேண்டும் என்றால் நேர்மையான வழியை மட்டுமே பின் தொடர வேண்டும் இது போன்ற வலைகளில் இளம் பெண்கள் விழுந்து விடக் கூடாது என்றும் அந்த பேட்டியில் மனம் திறந்து பேசியிருந்தார். பிக் பாஸ் வீட்டில் அவர் உள்ள நிலையில், அதனை பிக் பாஸ் ரசிகர்கள் அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X