37 வயதில் புற்றுநோய்.. வாழ்க்கையில் மிகவும் மோசமான நாட்கள்..போராடும் பிக்பாஸ் பிரபலம்!

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை ஒருவர் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அந்த போட்டோவை அவர் நேற்று தனது இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து இருந்தார். பலரும் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று ஆறுதல் கூறிவந்த நிலையில், அந்த நோயுடன் போராடி வருவது குறித்து கூறியுள்ளார்.

37 வயதே ஆன மாடல் அழகி ஹினா கான் ஜம்மு காஷ்மீரை பூர்வீகமாகக் கொண்டவர். இவர் படித்துக்கொண்டு இருக்கும்போதே, மாடல் துறையில் இருந்த ஆர்வம் காரணமாக மாடல் அழகியாக மாறினார். ஒரு சில விளம்பரங்களில் நடித்து வந்த இவருக்கு பஞ்சாப் மற்றும் ஹிந்தி தொலைக்காட்சியில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பின், ஹிந்தி பிக் பாஸ் சீசன் 11 நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு பிரபலமான இவர் கில்லாடி என்ற ரியாலிட்டி ஷோவிலும் கலந்து கொண்டார்.

hina khan bigg boss cancer

ஹினா கான்: அடுத்தடுத்து சீரியல்களில் நடித்து வந்த ஹினா கானுக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் மார்பக புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மூன்றாம் நிலை மார்பக புற்றுநோயால், பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அதற்குரிய சிகிச்சை பெற்று வருவதாகவும் பகிர்ந்து இருந்தார். தொடர்ந்து புற்று நோய்க்காக சிகிச்சை பெற்று வரும் ஹினா மருத்துவமனையில் சிறுநீரக பையை கையில் வைத்துக்கொண்டு, மருத்துவமனையில் நடந்து செல்லும் போட்டோவை பகிர்ந்து இருந்தார். அதைப்பார்த்த பலரும் விரைவில் குணமடைய வேண்டும் என்று வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

hina khan bigg boss cancer

மோசமான நாட்கள்: கடந்த சில மாதங்களுக்கு முன் கீமோ சிகிச்சைக்காக மொட்டை தலையுடன் இருக்கும் வீடியோவை பகிர்ந்து இருந்த ஹினா. புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று நான் நலமாக இருக்கிறேன்.நான் வலிமையாகவும், உறுதியாகவும், இந்த நோயைக் கடக்க முழுமையாக தயாராகி விட்டேன். மார்பக புற்று நோய் மூன்றாம் கட்டம் என்று சொன்ன போது கவலையில் மூழ்கி போனேன். என் வாழ்கையில் அது மிகவும் மோசமான நாட்கள். ஆனால், அதில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வருகிறேன். இருப்பினும், இந்த நோயில் இருந்து நான் முழுமையாக வெளியேறுவதற்கு தேவையான அனைத்தையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன் என்று பதிவிட்டு இருந்தார்.

hina khan bigg boss cancer

பாராட்டிய சல்மான் கான்: மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்ட போதும், நடிகை ஹினா கான், தைரியமாக அதை எதிர்கொண்டு வருகிறார். இருக்கும் வரை மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதற்காக, அண்மையில் மாலத்தீவிற்கு சுற்றுலா சென்று இருந்தார். அந்த போட்டோக்களையும் அவர் இன்ஸ்டாவில் பகிர்ந்து இருந்தார். இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு இவரை வரவைத்த சல்மான் கான், ஹினா கான் ஒரு போர்வீரர், உறுதியான மன தைரியம் கொண்டவர் என்று பாராட்டி இருந்தார்.

hina khan bigg boss cancer

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X