ஸ்டைலிஷ் தமிழச்சியாக வலம் வரும் ஜூலி..எல்லாமே படவாய்ப்புக்குத்தான் !

சென்னை : தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டம் தீவிரமானபோது, போராட்டத்தை விதவிதமாக நடத்தி அனைவரின் பார்வையும் தன் மீது திரும்பி யாருடா இந்த பொண்ணு என கேட்க வைத்தவர் ஜூலி.

Recommended Video

Julie வெளியிட்ட Instagram பதிவு... அதிர்ச்சியில் ரசிகர்கள்! Celebrity

இந்த போராட்டத்தின் மூலம் பிரபலமான ஜூலி, விஜய் டிவியில் பிக் பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டு ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கி, நெட்டிசன்களுக்கு தரமான கண்டென்ட்டுகளை கொடுத்தார்.

தற்போது ஜூலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம ஸ்டைலாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

பிக் பாஸ் ஜூலி

பிக் பாஸ் ஜூலி

பிக் பாஸ் ஜூலி என்றதும் முதலில் நம் நினைவுக்கு வருவது குறும்படம் தான். பிக் பாஸ் முதல் சீசனில் ஓவியா பற்றி மற்றவர்களிடம் பொய்பேசி கமலிடம் கொத்தாக மாட்டிக்கொண்டார் ஜூலி. அதுமட்டுமில்லாமல், "அய்யோ வயிறு வலிக்குது என்று அழுது ஆர்பாட்டார் செய்தார். இதையடுத்து, பிக் பாஸ் வீட்டை விட்டு ஜூலி வெளியே வந்த பின்பும், இணையத்தில் அவரை பலர் ட்ரோல் செய்து கண்டபடி விமர்சனம் செய்தனர். ஆனால், சமீபத்தில் பிக் பாஸ் அல்டிமேட்டில் கலந்து கொண்டு தனக்கு ஏற்பட்ட களங்கத்தை துடைத்தார்.

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில்

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில்

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் சகபோட்டியாளராக கலந்து கொண்ட தாடி பாலாஜி, பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஜூலி பல அவமானங்களை சந்தித்தார். வேறு யாராக இருந்தாலும் இந்த அளவுக்கு போராடி இருக்க மாட்டார்கள் மனதளவில் உடைந்து இருப்பார்கள்.ஆனால் ஜூலி துணிந்து போராடினார் என்று ஜூலியை புகழ்ந்தார். மேலும், ஜூலி 10க்கும் மேற்பட்ட குழந்தைகளை படிக்க வைத்து வருகிறார் என்றார் இதன்மூலம் அவருக்கு என்று தனி ரசிகர்கள் உருவாகினர்.

சொந்தமாக யூடியூப் சேனல்

சொந்தமாக யூடியூப் சேனல்

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு தற்போது ஒரு சில படங்களில் கமிட் ஆகி வரும் இவர் சமூக வலைதள பக்கங்களில் அவ்வப்போது சில போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். ஜூலி சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி ஹோம் டூர் வீடியோவை வெளியிட்டு இருந்தார்.

ஸ்டைலிஷ் தமிழச்சி

ஸ்டைலிஷ் தமிழச்சி

இந்நிலையில், ஜூலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,டாப் ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில், தலைமுடியை கலைத்துவிட்டு விதவிதமான புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் பலர், ஸ்டைலிஷ் தமிழச்சி என ஜூலியை வர்ணித்து கவிதை பாடி வருகின்றனர். என்னதான் போட்டோஷூட் எடுத்தாலும், படவாய்ப்பு வரவில்லையே என மனதிற்குள் புலம்பி வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X