பிக்பாஸ் ஜூலிக்கு திருமணம் முடிந்தது.. செம கொண்டாட்டம்.. கலந்துகொண்ட பிரபலங்கள் யார் தெரியுமா?

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் வெகுவாக பிரபலமடைந்த ஜூலி; முகமது ஐக்ரீம் என்பவரை காதலித்தார். அவர்கள் இரண்டு பேருக்கும் இடையே சில வாரங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்தது. அதனையடுத்து ஜனவரி 16ஆம் தேதி திருமணம் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று சென்னையில் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த கையோடு மாலையே வரவேற்பும் நடந்து முடிந்தது. அதில் ஏகப்பட்ட பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

தமிழ்நாட்டில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொண்டு; அப்போது ஆட்சியில் இருந்தவர்களை கடுமையாக விமர்சனம் செய்து கோஷங்கள் எழுப்பியவர் ஜூலி. அடிப்படையில் செவிலியான அவர் அந்தப் போராட்டத்துக்கு பிறகு பலராலும் கொண்டாடப்பட்டார். அந்த சமயத்தில் வீர தமிழச்சி என்றெல்லாம் ஒருதரப்பினரால் புகழப்பட்டார் என்பது நினைவுகூரத்தக்கது. அந்தப் போராட்டத்தில் கிடைத்த பிரபல்யம்; பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்துகொள்ளும் வாய்ப்பை அமைத்து கொடுத்தது.

பிக்பாஸ் ஜூலி: அதன்படி முதல் சீசனில் அவர் கலந்துகொண்டபோது அவரைத் தவிர்த்து மற்ற எல்லா போட்டியாளர்களுமே திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள் ஆவார்கள். இருந்தாலும் ஜூலி அதையெல்லாம் யோசிக்காமல் தன்னால் முடிந்த அளவுக்கு போட்டியில் சிறப்பாக விளையாடினார். ஆனால் ஓவியாவிடம் அவர் செய்த சில செயல்கள் அவருக்கு எதிராக ரசிகர்களை திருப்பியது. கமலேகூட குறும்படம் போட்டு கண்டிக்கும் அளவுக்கு நிலைமை சென்றது.

Bigg Boss Fame Julie Marries Mohammed ikreem in Chennai Here are details
Photo Credit:

சினிமாவில் ஜூலி: தனக்கு ஏற்பட்ட நெகட்டிவிட்டி அளவுக்கு மீறி சென்றதை உணர்ந்தே இருந்தார் ஜூலி. மேலும் சில வாரங்களில் எவிக்ட்டும் செய்யப்பட்டார். பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த பிறகு சில படங்களில் நடித்தார். ஆனால் எதிர்பார்த்தபடி அவருக்கு சினிமாவில் பெரிய வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. வெள்ளித்திரைக்கு பிறகு சின்னத்திரையிலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போதுதான் முகமது ஐக்ரீமுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது.

நிச்சயதார்த்தம்: அந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இரண்டு பேரின் காதலுக்கும் வீட்டில் சம்மதம் கிடைக்க சில வாரங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்தது. தொடர்ந்து ஜனவரி 16ஆம் தேதி திருமணம் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. திருமண தேதி அறிவிக்கப்பட்டவுடன் கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு, பூச்சி முருகன் என பல பிரபலங்களுக்கு நேராக சென்று பத்திரிகை வைத்தார். மேலும் பல பிரபலங்களுக்கு ஐக்ரீமும், ஜூலியும் ஜோடியாக சென்று அழைப்பிதழ் கொடுத்தார்கள்.

நடந்து முடிந்த திருமணம்: இந்நிலையில் அறிவித்தபடியே சென்னையில் வைத்து நேற்று திருமணம் கோலாகலமாக நடந்தது. அந்தத் திருமணத்தில் இரண்டு பேருக்கும் நெருக்கமான உறவினர்களும், நண்பர்களும் கலந்துகொண்டார்கள். திருமணத்தை தொடர்ந்து பரங்கி மலையில் இருக்கும் பேட்ரிக் தேவாலயத்தில் வைத்து வரவேற்பும் நடந்தது. அதில் பூச்சி முருகன் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். சோஷியல் மீடியாக்கள் மூலமும் ரசிகர்கள் அவர்களுக்கு தங்களது வாழ்த்தினை தெரிவித்துவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X