விஜய் எந்த தொகுதியில் போட்டினு தெரியட்டும்.. அவங்க கட்சி லட்சணத்த கிழிச்சு தொங்க விடுறேன்.. ஜூலி ஆவேசம்
சென்னை: நடிகர் விஜய் மற்றும் அவரது கட்சியான தமிழக வெற்றிக் கழகம் நடைபெறவுள்ள 2026 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதால் இம்முறை நான்கு முனைப் போட்டி என்று அரசியல் களம் சூடு பிடித்துக் கொண்டு உள்ளது. நடிகர் விஜய் ஒரு புறம் தனது முதல் தேர்தலிலேயே ஆட்சியைப் பிடித்து முதலமைச்சர் ஆகிவிடலாம் என்று இருந்தாலும், அவரது கட்சியினர் மற்றும் கட்சிக்கு ஆதரவானவர்கள், அவரது ரசிகர்கள், ரசிகைகள் என பலரது நடவடிக்கை தொடர்ந்து கட்சி மீது அதிருப்திகளை உருவாக்கி வருகிறது.
இவர்கள் தான் இப்படிச் செய்கிறார்கள் என்று பார்த்தால், விஜய் நடவடிக்கையும் பொறுப்பான அரசியல் கட்சித் தலைவர் போல இல்லை என்று மற்ற அரசியல் கட்சித் தலைவர்கள் தொடங்கி பலரும் விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் தனது ரசிகைகளை மிகவும் மோசமாக விமர்சித்த அரசியல் விமர்சகர் பொன்ராஜ் மீது புகார் அளித்தார்.
இப்படி இருக்கும்போது, நடிகையும் பிக் பாஸ் பிரபலமுமான ஜூலி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது, " என்ன அண்ணே.. டி.ஜி.பி அலுவலத்திற்குச் சென்று புகார் கொடுத்தீங்க போல இருக்கிறதே. நாம அதெல்லாம் கொடுக்கலாமா அண்ணா? நாம இப்படி ஒரு கூட்டத்தை வைத்துக் கொண்டு இப்படி ஒரு புகார் கொடுப்பதற்கு வொர்த்தா? யோசிக்க வேண்டாமா?

மினி எப்ஸ்டீன் ஃபைல்ஸ்: அதான் உன்னோட ஆளுங்க மினி எப்ஸ்டீன் ஃபைல்ஸே நடத்திக் கொண்டு இருக்கிறார்களே. ஒரு பெண் ஆசையாக உன்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று வந்தால், அந்த பெண்ணை தனது இஷ்டத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ஒரு கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ளாயே.. இது எல்லாம் உனக்கு தெரியுமில்ல அண்ணே. நீ தான் விரிச்சுவல் வாரியர்ஸ் நீங்க செய்யறத எல்லாம் பார்க்கிறேன், இன்னும் தொடர்ந்து செய்யுங்கள் என்று பாராட்டிக் கொண்டு இருக்கிறாயே?
எந்த தொகுதினு மட்டும் சொல்லு: சரி இது ஒரு ஜனநாயக நாடு, புதிதாக ஒருவர் அரசியலுக்கு வந்தால் பெரும்பான்மையான மக்கள் அரசியல் வயப்படுவார்கள் என்ற நல்ல எண்ணம் உன் மீது இருந்தது. உனது கட்சியில் யாருமே வெற்றி பெற மாட்டார்கள். நீ கூட அந்த நட்சத்திர அந்தஸ்தை வைத்து வென்று விடக் கூடாது அண்ணே. நீ எந்த தொகுதியில் போட்டியிடறனு மட்டும் சொல்லு, நான் அங்க தான் அண்ணா டேரா. நான் இறங்கி நின்னு அந்த தொகுதியில் பிரச்சாரம் செய்வேன் அண்ணா. பெண்களுக்கு எந்த அளவுக்கு உனது கட்சியில் பாதுகாப்பு இருக்கிறது என்பது தொடர்பாக நான் பிரச்சாரம் செய்வேன். சீக்கிரம் சீக்கிரம் அறிவியுங்கள் அண்ணா, ஐ எம் வெயிட்டிங், நான் வரேன் அண்ணே" என்று பேசி வீடியோ பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications