எல்லா வண்டியும் நல்லா ஓடணும்.. ஆயுத பூஜை.. வண்டிக்கு பூஜை போட்ட கவின்.. குவியுது லைக்ஸ்!

சென்னை: பிக் பாஸ் ரசிகர்களால் ஒரு போதும் கடந்த சீசனை மறக்கவே முடியாது. அதிலும், கவின் - லாஸ்லியாவை எப்போதுமே பிக் பாஸ் ரசிகர்கள் மறக்க மாட்டார்கள்.

விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி சீரியலில் பிரபலமான கவின், நட்புன்னா என்னானு தெரியுமா என ஒரு படத்தில் ஹீரோவாக நடித்து விட்டு பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார்.

ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு, தனது வண்டிக்கு பூஜை போட்ட கவின், அந்த போட்டோவை ஷேர் செய்து வைரலாக்கி வருகிறார்.

கவின்னாலே டிரெண்டிங் தான்

கவின்னாலே டிரெண்டிங் தான்

பிக் பாஸ் கவினுக்கு ஏகப்பட்ட ஆர்மியினர் உள்ளனர். அவரது போட்டோ, அவரை பற்றிய பேச்சுக்கள், செய்திகள் என எது வந்தாலும் அது உடனே சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி விடும். ஆயுத பூஜையை முன்னிட்டு தனது ரசிகர்களுக்கு தரிசனம் கொடுத்துள்ளார் நடிகர் கவின். அந்த போட்டோவுக்கு லைக்குகள் குவிகிறது.

எல்லா வண்டியும் நல்லா ஓடணும்

எல்லா வண்டியும் நல்லா ஓடணும்

ஆயுத பூஜையை முன்னிட்டு தனது ஹோண்டா டியோ பைக்குக்கு பூஜை போட்டு மாலை போட்ட கவின், அதன் மேல் அமர்ந்து கொண்டு தனது ரசிகர்களுக்கு ஒரு பெரிய கும்பிடா போட்ட போட்டோவை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து வைரலாக்கி உள்ளார். "எல்லா வண்டியும் நல்லா ஓடணும்" எல்லோர் வாழ்க்கையும் செழிக்கணும் என்பதை சூசகமாக கூறியுள்ளார்.

எளிமை தான் காரணம்

எளிமை தான் காரணம்

என்ன கவின் காருக்கெல்லாம் பூஜை போடாம, வெறும் டியோ பைக்கை வச்சு போஸ் கொடுத்துருக்கீங்க என நெட்டிசன்கள் கேட்டு கலாய்க்க, அவருடைய இந்த எளிமை தான் கவினின் வெற்றிக்கே காரணம் என அவரது ரசிகர்கள் கமெண்ட் பக்கத்தில் பதில் அளித்து வருகின்றனர். கார் இருக்கா கவின்?

லிப்ட் அப்டேட் புரோ

லிப்ட் அப்டேட் புரோ

ரசிகர்களுக்கு தனது ஆயுத பூஜை வாழ்த்துக்களை நடிகர் கவின் கூறியுள்ள நிலையில், கவினின் அடுத்த படமான லிப்ட் படம் பற்றிய அப்டேட் கொடுங்க புரோ என அவரது ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். பிகில் படத்தில் தென்றல் கதாபாத்திரத்தில் நடித்த அம்ரிதா அய்யர் நாயகி அந்த படத்தில் நடித்துள்ளார்.

செம்மையா இருக்கீங்க

செம்மையா இருக்கீங்க

புதுசா லாங் ஹேர்லாம் விட்டு சும்மா கெத்தா இருக்கும் கவினின் சமீபத்திய போட்டோக்களை பார்த்த அவரது ரசிகர்கள், அண்ணா, நீங்க செம்மையா இருக்கீங்க என அந்த போட்டோவை ஷேர் செய்து கமெண்ட் செய்து புகழ்ந்துள்ளனர். இந்த லுக் உங்களுக்கு சூப்பர் புரோ என்றும் கமெண்ட்டுகள் குவிகின்றன.

ஹேப்பி ஆயுத பூஜை அண்ணா

ஹேப்பி ஆயுத பூஜை அண்ணா

கவினுக்கு ஏகப்பட்ட தம்பி, தங்கை ரசிகர்கள் உள்ளனர். வேட்டி சட்டையில் செம அழகாக இருக்கும் கவினின் போட்டோவை போட்டு, ஹேப்பி ஆயுத பூஜை அண்ணா என இந்த ரசிகர் வாழ்த்து கூறியுள்ளார். இவரை போலவே ஏகப்பட்ட ரசிகர்களும் வாழ்த்தி வருகின்றனர். சீக்கிரமே லிப்ட் பட ரிலீசுக்காகவும் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X