தளபதி 65 படத்தில் பிக் பாஸ் கவினுக்கு இப்படியொரு ரோலா? வைரலாகும் தகவல்.. பூஜைக்கும் போயிருக்காரு!
சென்னை: தளபதி 65 படத்தின் பூஜை இன்று சன் ஸ்டூடியோவில் போடப்பட்டுள்ளது.
இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவாகும் படங்களில் விஜய் டிவியை சேர்ந்த பிரபலங்களுக்கு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தளபதி 65 படத்தில் பிக் பாஸ் பிரபலம் மற்றும் நடிகருமான கவின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்கிற தகவல் வைரலாகி வருகிறது.

கிளாப் போர்ட் ரெடி
சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக தளபதி 65 பட பூஜை புகைப்படங்களை விரைவில் வெளியிட உள்ள நிலையில், கொஞ்சம் கொஞ்சமாக பட பூஜை புகைப்படங்கள் கசிய தொடங்கி விட்டன. பட பூஜையை முன்னிட்டு பொரி கடலைக்கு நடுவே வைக்கப்பட்டுள்ள தளபதி 65 கிளாப் போர்ட் புகைப்படம் வெளியாகி விஜய் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.

சிலுக்கு சட்டை
தளபதி விஜய் கிரே கலரிலான சிலுக்கு சட்டை அணிந்து பட பூஜையில் கலந்து கொண்டுள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளது. கூடிய சீக்கிரமே தளபதியின் தரிசனத்தை சன் பிக்சர்ஸ் விஜய் ரசிகர்களுக்காக வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இயக்குநர் அறிவிப்பு வீடியோ வெளியாகி டிரெண்டானது குறிப்பிடத்தக்கது.

தளபதி 65ல் கவின்
விஜய் டிவி நடிகர், ஹீரோ, பிக் பாஸ் பிரபலம் என ஏகப்பட்ட ரசிகர்களை கொண்டுள்ள நடிகர் கவின், தளபதி 65 படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் ஹாட் அப்டேட் ஒன்று வெளியாகி கவின் ஆர்மியை கொண்டாட்டத்தில் ஆழ்த்தி உள்ளது. தளபதி 65 பட பூஜையிலும் கவின் கலந்து கொண்டிருக்கிறாராம்.

விஜய் டிவி பிரபலங்கள்
விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்களை இயக்கி வந்த நெல்சன், கோலமாவு கோகிலா படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமானார். அந்த படத்தில் விஜய் டிவியை சேர்ந்த ஜாக்குலின், அறந்தாங்கி நிஷா உள்ளிட்ட பிரபலங்கள் நடித்து இருந்தனர். சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் பிக் பாஸ் அர்ச்சனா, குக் வித் கோமாளி தீபா சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்நிலையில், அடுத்ததாக தளபதி 65 படத்தில் கவின் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பூஜா இல்லாமல் பூஜை
சென்னையில் இன்று நடைபெறும் தளபதி 65 படத்தின் பூஜையில் நாயகி பூஜா ஹெக்டே கலந்து கொள்ளவில்லை. இது தொடர்பாக ட்விட்டரில் அவர், வேறு ஒரு படத்தின் படப்பிடிப்பில் இருப்பதால் தளபதி 65 பூஜையில் கலந்து கொள்ள முடியவில்லை, இருந்தாலும் என் நினைவுகள் முழுவதும் அங்கு தான் இருக்கு என பதிவிட்டுள்ளார். நடிகர் பிரபாஸ் உடன் ராதே ஷ்யாம் படத்தில் பூஜா ஹெக்டே நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











