அந்த பிக் பாஸ் பிரபலம் சரியான காம காட்டெரும சார்..! இணையத்தை கலங்கடிக்கும் வீடியோ
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள், சரவணன் மீனாட்சி போன்ற சீரியல்கள் மூலம் பிரபலமானவர் கவின்.
பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக பங்கேற்று ரசிகர்களிடம் மேலும் நல்ல அறிமுகமானார்.
அதேநேரம் சினிமாவிலும் சப்போர்ட்டிங் கேரக்டரில் நடித்து வந்த கவினுக்கு லிப்ட் திரைப்படம் கம்பேக் கொடுத்தது.
அதனைத் தொடர்ந்து கவின் நடித்துள்ள டாடா திரைப்படம் வரும் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

பிக் பாஸ் கவின்
விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள், சரவணன் மீனாட்சி போன்ற சீரியல்களில் நடித்து கவனம் ஈர்த்தவர் கவின். அதேநேரம் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய பீட்சா, விஷ்ணு விஷால் நடித்த இன்று நேற்று நாளை போன்ற படங்களில் சப்போர்ட்டிங் ரோலில் நடித்துள்ளார். அதன் பிறகு பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக பங்கேற்ற கவினுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து 2021ல் கவின் ஹீரோவாக நடித்த லிஃப்ட் திரைப்படம் அவருக்கு செம்ம கம்பேக் கொடுத்தது.

ரிலீஸுக்கு காத்திருக்கும் டாடா
லிஃப்ட் திரைப்படம் மூலம் திரையுலகில் பிஸியான கவின், தற்போது டாடா படத்தில் ஹீரோவாக நடித்து முடித்துள்ளார். கவின் ஜோடியாக பீஸ்ட பட புகழ் அபர்னா தாஸ் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், பாக்யராஜ், விடிவி கணேஷ் உள்ளிட்ட பலரும் முக்கியமான பாத்திரங்களில் நடித்துள்ளனர். கணேஷ் கே பாபு இயக்கியுள்ள இந்தப் படம் காமெடி ஜானரில் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. வரும் 10ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகும் இந்தப் படத்தை ரெட் ஜெயன்ட் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.

சரியான காம காட்டெரும
டாடா படத்திற்கு ரசிகர்களிடம் எதிர்பார்ப்புள்ள நிலையில், அதன் ட்ரெய்லர் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்தப் படத்தில் கவினும் அபர்ணா தாஸும் கணவன் - மனைவியாக நடித்துள்ளதும் உறுதியாகியுள்ளது. காமெடியாக தொடங்கும் இந்த ட்ரெய்லர், போக போக கொஞ்சம் சீரியஸாகவும் எமோஷனலாகவும் முடிவடைகிறது. முக்கியமாக இந்த ட்ரெய்லரில் கவினை பார்த்து 'சரியான காம காட்டெரும சார் இவன்" என ஒரு நண்பன் கேரக்டர் சொல்வதைப் போல இடம்பெற்ற சீன் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கை கொடுக்குமா டாடா?
அதுமட்டும் இல்லாமல் ஒட்டுமொத்தமாகவும் டாடா படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களின் பல்ஸை எகிற வைத்துள்ளது. 2கே கிட்ஸ் ரசிகர்களை டார்க்கெட் செய்து உருவாகியுள்ள இந்தப் படம், கவினுக்கு இன்னொரு ஹிட் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பீஸ்ட் படத்தில் ரசிகர்களை கிறங்க வைத்த அபர்ணா தாஸ் இதில் ஹீரோயினாக நடித்துள்ளார். கவின் - அபர்ணா தாஸ் கெமிஸ்ட்ரியில் டாடா படத்தின் ரிசல்ட் எப்படி இருக்கும் என்பது வரும் 10ம் தேதி தெரிந்துவிடும்.


Click it and Unblock the Notifications











