குட்டி ஸ்கர்ட்.. குட்டி டாப்ஸ்.. நச்சுனு நாலு போட்டோ வெளியிட்ட லாஸ்லியா!
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான லாஸ்லியா குட்டி ஸ்கர்டுடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். இந்த போட்டோவுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.
இலங்கையைச் சேர்ந்த லாஸ்லியா, திரிகோணமலையில் தனது படிப்பை முடித்தார். இதன் பின் ஐடி துறையில் வேலைக்கு சேர்ந்த இவர், அந்த வேலையை விட்டு சக்தி தொலைக்காட்சியில், செய்திவாசிப்பாளரானார்.
இதையடுத்து, குட் மார்னிங் ஸ்ரீலங்கா உள்ளிட்ட சில நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

நடிகை லாஸ்லியா
இலங்கை செய்திவாசிப்பாளரான லாஸ்லியாவிற்கு பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட லாஸ்லியா. கொஞ்சும் இலங்கை தமிழில் க்யூட்டாக பேசி ஏகப்பட்ட ரசிகர்களை தன் பக்கம் திருப்பினார். அந்த நிகழ்ச்சியில் சக போட்டியாளரான கவினை காதலித்து காதல் கிசு கிசுவில் சிக்கினார்.

வெற்றி பெறவில்லை
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் இரண்டு படங்களில் அடுத்தடுத்து கமிட்டானார் லாஸ்லியா. இதில், கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் இணைந்து பிரெண்ட் ஷிப் படத்தில் நடித்தார். இந்த படம் ஓரளவுக்கு ஓடியது. இதையடுத்து, மலையாளத்தில் மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்த ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் படத்தின் ரீமேக்கான கூகுள் குட்டப்பன் படத்தில் நடித்தார். இதில் தர்ஷனுக்கு ஜோடியாக நடித்தார். இந்த படமும் எதிர்பார்த்த வெற்றியை பெற்றுத்தரவில்லை.

நச்சுனு நாலு போட்டோ
தற்போது படவாய்ப்பு இல்லாததால், சோஷியல் மீடியாவே கதி என இருக்கும் லாஸ்லியா அவ்வப்போது கொஞ்சம் தூக்கலான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது இவர், நீல நிற ஸ்லீவ்ரெலெஸ்சில் குட்டி டாப் போட்டுக்கொண்டு, குட்டி ஸ்கர்ட்டுன் தொடை தெரிய போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோவுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.

எலும்பும் தோலுமான லாஸ்லியா
நடிகை லாஸ்லியாவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 1.7 மில்லியன் பாலோவர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். இதனால், தனது ரசிகர்களை கவர விதவிதமான போட்டோக்களை பதிவு செய்து வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் சும்மா கும்முனு இருந்த லாஸ்லியா, தற்போது உடல் எடை குறைந்த எலும்பும் தோலுமாக மாறியதால், எதற்கு இந்த வேலை என ரசிகர்கள் அவரை திட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











