வெப்பம் இயக்குனரின் 'வெற்றி'க்கு பிறகு.. அடுத்த படத்தில் ஒப்பந்தமான பிக் பாஸ் முகேன்!
சென்னை: பிக் பாஸ் முகேன் நடிக்கும் புதிய படத்தை ஸ்கைமேன் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கின்றது
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்களிடம் பிரபலமானவர் முகேன்.

இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் டைட்டிலையும் முகேன் வென்றிருந்தார்.
மலேசியாவை சேர்ந்த முகேன், வெற்றி என்ற படம் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். இதுபற்றிய அறிவிப்பு சில மாதங்களுக்கு முன் வெளியானது. இந்நிலையில் அவர் மற்றொரு படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படத்தை ஸ்கை மேன் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் என்ற நிறுவனம் தயாரிக்கிறது.
சிறுத்தை சிவாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கவின் இதை இயக்குகிறார்.
இந்த படத்தை தயாரிப்பாளர் கலைமகன் தயாரிக்கிறார். படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
Comments


Click it and Unblock the Notifications