என்ன கன்றாவிடா இது?.. இதுவரை இல்லாத கவர்ச்சி உடையில் பிக் பாஸ் பிரபலம்!
சென்னை: ரசிகர்களின் பேராதரவை பெற்ற பிக் பாஸ் வரலாற்றிலேயே முதல் திருநங்கை போட்டியாளராக நமீதா மாரிமுத்து கலந்து கொண்டார். பேஷன் ஷோ, மாடலிங் துறைகளில் பயணித்துக் கொண்டிருக்கும் இவர் ஒவர் கவர்ச்சி உடையில் இருக்கும் போட்டோவை வெளியிட்டு ரசிகர்களை தர்மசங்கடத்தில் ஆழ்த்தி உள்ளார்.
தாய்லாந்தில் நடைபெற்ற திருநங்கைகளுக்கான 'மிஸ் இண்டர்நேஷனல் குயின் - 2022' போட்டியில் கலந்து கொண்டு 'மோஸ்ட் பாப்புலர் வோட்' என்ற விருதினை பெற்றார்.திருநங்கைகளுக்கான அழகி போட்டி பலவற்றில் கலந்து கொண்டு பல விருதுகளை வென்றுள்ளார். இவர் மாடல் அழகியாக மட்டுமில்லாமல், ஒரு சில படத்தில் நடித்தும் உள்ளார். சமுத்திரகனி இயக்கிய நாடோடிகள் படத்தில் இவர் நடித்தது மட்டுமில்லாமல் பாடலொன்றும் பாடியிருக்கிறார்.

நமீதா மாரிமுத்து: இப்படி பிரபலமான நடிகை நமீதா மாரிமத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் இவர், கடந்து வந்த பாதை குறித்து பேசினார். திருநங்கையாக மாறிய போது அவர் வாழ்க்கையில் சந்தித்த பிரச்சனைகள் கண்ணீர் மல்க பேசி இருந்தார். அவர் பேசியதை 20 நிமிடங்கள் கட் எதுவும் செய்யாமல் அப்படியே விஜய் டிவி ஒளிபரப்பி ஓவர் நைட்டில் அவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கியது.

கண்ணீர் கதை: மற்ற போட்டியாளர்களை விட திருநங்கை நமீதா மாரிமுத்துவின் கதை ஒட்டுமொத்த ரசிகர்களையும் கண்ணீர் கடலில் ஆழ்த்தியது. ஒவ்வொரு திருநங்கைகளின் வாழ்விலும் ஏற்படும் துயரங்கள் குறித்து மக்கள் விழிப்புணர்வு அடைய நமீதா மாரிமுத்துவின் கண்ணீர் கதை முக்கியமானதாக ரசிகர்களால் பார்க்கப்பட்டது.

இதனால், அந்த சீசனின் டைட்டில் வின்னர் நமீதா மாரிமுத்து தான் என அனைவரும் நினைத்து வந்த நிலையில், நமீதா மாரிமுத்து அவராகவே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். அவர் ஏன் வெளியேறினார் என்று எந்த காரணத்தையும் சொல்லாமல் சில தவிர்க்க முடியாத காரணத்தால் அவராக வெளியேறினார் என்று பிக் பாஸ் வாய்ஸ் மட்டுமே வந்தது. ஆனால், அவருக்கு கொரோனா தொற்றால் வெளியேறியதாகவும், தாமரை செல்வியுடன் சண்டை போட்டு வெளியேறியதாகவும் சொல்லப்பட்டது.

என்ன கன்றாவிடா: பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த வெளியேறிய நமீதா மாரிமுத்து சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கிறார். இப்போது, விதவிதமான போட்டோக்களை ஷேர் செய்து லைக்குகளை அள்ளி வரும் இவர். தற்போது, அதீத கவர்ச்சி உடையில், அதாவது, நீச்சல் உடையில் இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோ பார்ப்பதற்கு விவகாரமாக இருக்கிறது. இதைப்பார்த்த நெட்டிசன்ஸ் என்ன கன்றாவிடா இது, என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











