பிக் பாஸ் பிரபலத்துடன் காஞ்சனா பட நடிகை டேட்டிங்.. நட்புக்கும் காதலுக்கும் நடுவில் ஒரு உறவாம்!
மும்பை: பிக் பாஸ் மராத்தி சீசனில் போட்டியாளராக கலந்துக் கொண்டு காதல் பறவைகளாக கலக்கிய நிக்கி தம்போலி மற்றும் அர்பாஸ் படேல் வெளியேவும் தங்கள் காதலை தரமாக வளர்த்து வருகின்றனர். பிக் பாஸ் வீட்டுக்குள் இருவரும் போலியாக காதலிப்பது போல நடிக்கின்றனர் என ரசிகர்கள் கிண்டல் செய்தனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய நிலையில், தாங்கள் இருவருமே உண்மையாகவே காதலிக்கிறோம் என்பதை இருவரும் நிரூபிக்கவே தற்போது அடிக்கடி பல்வேறு இடங்களுக்கு டேட்டிங் சென்று வருவது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா 3 படத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை நிக்கி தம்போலி என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.
காஞ்சனா பட நடிகை: 28 வயதாகும் நிக்கி தம்போலி இந்தி பிக் பாஸ் 14வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு 2வது ரன்னர் அப் ஆனார். இந்த ஆண்டு மராத்தி பிக் பாஸ் சீசன் 5ல் கலந்துக் கொண்டு அங்கேயும் 2வது ரன்னர் அப்பாக வெளியேறினார். இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தின் தெலுங்கு வெர்ஷனில் நடித்த நிக்கி தம்போலி தமிழில் ராகவா லாரன்ஸ், ஓவியா, வேதிகா நடித்த காஞ்சனா படத்தில் நடித்தார். பாலிவுட்டில் எப்படியாவது சினிமா வாய்ப்பை பிடிக்க நினைத்த அவர் தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோக்களை அடுக்க ஆரம்பித்தார்.

பிக் பாஸ் பிரபலம்: ஆனால், பாலிவுட்டில் நடிக்க வாய்ப்புக் கிடைக்காத நிலையில், எந்த ஊரில் எல்லாம் பிக் பாஸ் நிகழ்ச்சி நடக்கிறதோ அதில் எல்லாம் கலந்துக் கொண்டு எப்படியாவது பாலிவுட்டில் அறிமுகமாக துடித்துக் கொண்டிருக்கிறார். சல்மான் கான் தொகுத்து வழங்கிய 14வது சீசனில் கலந்து கொண்ட பின்னரும் அவருக்கு பெரிதாக வாய்ப்புக் கிடைக்காத நிலையில், தற்போது மராத்தி படங்களிலாவது வாய்ப்புக் கிடைக்குமா என நினைத்து மராத்தி பிக் பாஸில் பங்கேற்றுள்ளார். ஆனால், அவருக்கு புதிதாக காதல் கிடைத்துள்ளது.

அர்பாஸ் உடன் டேட்டிங்: பிக் பாஸ் மராத்தி சீசன் 5 போட்டியாளரான அர்பாஸ் படேல் உடன் பிக் பாஸ் வீட்டிலேயே அவருக்கு ஸ்பார்க் ஆன நிலையில், பிக் பாஸை விட்டு வெளியே வந்த பின்னரும் பாவனி - அமீர் போல தங்கள் காதலை தொடர்கின்றனர். அடிக்கடி இருவரும் மும்பையின் பல்வேறு இடங்களில் டேட்டிங் செய்து வரும் போட்டோக்கள் வைரலான நிலையில், அதுதொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அர்பாஸ் தற்போது நாங்கள் நண்பர்களுக்கும் காதலர்களுக்கும் இடைபட்ட உறவில் இருக்கிறோம். ஒருவரை ஒருவர் அதிகம் புரிந்துக் கொள்ள முயற்சித்து வருகிறோம் எனக் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











