For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  அப்படி நடிக்கவே வாய்ப்புகள் வருகிறது.. ஆபாச நடிகராக மாற விருப்பமில்லை.. பிக் பாஸ் பிரபலம் பளிச்!

  |

  மும்பை: பிக் பாஸ் சீசன் 13ல் போட்டியாளராக கலந்து கொண்ட பரஸ் சாப்ரா தான் ஒரு ஆபாச நடிகராக மாற விரும்பவில்லை என பரபரப்பாக பேசியுள்ளார்.

  சன்னி லியோன் தொகுத்து வழங்கிய ஸ்ப்லிட்ஸ்வில்லா ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு டைட்டில் வின் பண்ண பரஸ் சாப்ராவுக்கு பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு உருவாகி உள்ளது.

  மண்ணுல குளிச்சு விளையாடும் பிரபல நடிகை.. ஒரு வாட்டி குளிக்க என்ன கட்டணம் தெரியுமா.. ஆத்தாடி!மண்ணுல குளிச்சு விளையாடும் பிரபல நடிகை.. ஒரு வாட்டி குளிக்க என்ன கட்டணம் தெரியுமா.. ஆத்தாடி!

  சமீபத்தில் பிக் பாஸ் 15 டைட்டில் வின்னர் ரூபினா திலக் உடன் ஆல்பம் வீடியோ ஒன்றிலும் பரஸ் சாப்ரா நடித்திருந்தார்.

  பிக் பாஸ் பிரபலம்

  பிக் பாஸ் பிரபலம்

  கடந்த பிக் பாஸ் சிசன் 13ல் போட்டியாளராக கலந்து கொண்டவர் பரஸ் சாப்ரா. அந்த சீசனில் ஆரம்பம் முதலே அவுட் ஆஃப் பாக்ஸாக திங்க் பண்ணி விளையாடிய இவர் கடும் போட்டியாளராக கருதப்பட்டார். ஆனால், எதிர்பாராத விதமாக கடைசியில் அவருக்கு டைட்டில் கிடைக்கவில்லை.

  சன்னிலியோன் ஷோவில்

  சன்னிலியோன் ஷோவில்

  நடிகை சன்னிலியோன் தொகுத்து வழங்கி வரும் எம்டிவியின் ஸ்ப்லிட்ஸ்வில்லா ரியாலிட்டி ஷோவில் இந்த ஆண்டு கலந்து கொண்ட பரஸ் சாப்ரா அந்த நிகழ்ச்சியின் டைட்டிலை தட்டித் தூக்கினார். பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் பரஸ் சாப்ராவுக்கு மிகப்பெரிய ரசிகர் வட்டம் உருவாகி உள்ளது.

  Sakshi Agarwal -கு திருமணம் முடிந்ததா? | வைரலாகும் புகைப்படம்
  அந்த மாதிரியான வாய்ப்புகள்

  அந்த மாதிரியான வாய்ப்புகள்

  டிவி தொடர்கள், வெப் தொடர்கள் என ஏகப்பட்ட வாய்ப்புகள் தனக்கு குவிந்து வருவதாகவும், ஆனால், பெரும்பாலான வெப் தொடர்கள் போல்டு காட்சிகளில் நடிக்கும் படியாகவே உருவாக்கப்பட்டுள்ளதால், அப்படியெல்லாம் எனக்கு நடிக்க விருப்பம் இல்லை எனக் கூறி மறுத்து வருகிறேன் என அதிரடியாக பரஸ் சாப்ரா அளித்துள்ள பேட்டி பாலிவுட்டில் பரபரப்பை கிளப்பி உள்ளது.

  பார்ன் ஸ்டார் இல்லை

  பார்ன் ஸ்டார் இல்லை

  மேலும், நான் ஒரு பார்ன் ஸ்டார் இல்லை. நடிப்பின் மீது நம்பிக்கையும் காதலும் கொண்டு தான் இந்த துறைக்கு வந்துள்ளேன். நல்ல திறமையான கதைகளில் சவாலான கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்க ஆவலுடன் இருக்கிறேன். ஆனால், கதைக்கே சம்பந்தம் இல்லாமல் கமர்ஷியலுக்காக படுக்கையறை காட்சிகளை வைத்து பல இயக்குநர்களும் படம் எடுத்து வருகின்றனர் என பளீச்சென சொல்லி சிக்ஸர் அடித்துள்ளார் பரஸ் சாப்ரா.

  எனக்கான எல்லை

  எனக்கான எல்லை

  நடிப்பில் கவர்ச்சி இருக்கலாம். ஆனால், ஆபாசம் இருக்கக் கூடாது. இப்போதெல்லாம் சின்ன சின்ன வெப்சீரிஸ் மற்றும் டிவி தொடர்களில் கூட தேவையில்லாமல் ஏகப்பட்ட ஆபாச காட்சிகளை வைத்து நடிகர்கள் நடிகைகளின் மொத்த துணிகளையும் உருவி விடுகின்றனர். ஆனால், எனக்கென்று ஒரு எல்லை இருக்கிறது. நிச்சயம் எப்போதும் அந்த எல்லையை நான் தாண்ட மாட்டேன் என்றும் உறுதியாக கூறியுள்ளார்.

  டைட்டில் வின்னருடன்

  டைட்டில் வின்னருடன்

  சல்மான் கான் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 15ல் டைட்டிலை தட்டிச் சென்ற ரூபினா திலக் உடன் சமீபத்தில் இவர் ஜோடி சேர்ந்து நடனமாடிய 'கலட்' மியூசிக் வீடியோ பல மில்லியன் பார்வைகளை கடந்து யூடியூபில் டிரெண்டாகி வருவது குறிப்பிடத்தக்கது. சீக்கிரமே பாலிவுட்டிலும் பரஸ் சாப்ரா என்ட்ரி கொடுப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

  English summary
  Bigg Boss season 13 participant Paras Chhabra opens up why he rejecting bold scenes offer in webseries and Tv series.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X