இந்தியன் படத்தையே ரீ ரிலீஸ் பண்ணி இருக்கலாம்.. இந்தியன் 2 படத்தை விமர்சித்த பிக் பாஸ் பிரபலம்!

சென்னை: உலகநாயகன் கமல்ஹாசனின் இந்தியன் 2 திரைப்படம் வெள்ளிக்கிழமை இந்தியா முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்திற்கு விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து எதிர்மறையான விமர்சனங்கள் வந்து கொண்டு இருக்கும் நிலையில், இந்தியன் 2 படம் பார்த்த பிக் பாஸ் பிரபலம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள கமெண்ட் தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

தமிழ் சினிமா வரலாற்றில் மட்டுமின்றி கமல்ஹாசன், ஷங்கர், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோரின் திரைப் பயணத்திலும் மிக முக்கியமான படம் இந்தியன். 1996ம் ஆண்டு வெளியான இந்த படத்தில்,கமல்ஹாசன், சுகன்யா,மனிஷா கொய்ராலா, ஊர்மிளா, கவுண்டமணி, செந்தில் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தின் மூலம் தொழில்நுட்பம், திரைக்கதை, மேக்கிங் என பல உச்சங்களை தொட்டிருந்தார் ஷங்கர். காலப்போக்கில் தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஒரு கிளாசிக் அந்தஸ்த்தை பெற்றது இப்படம்.

indian 2 rachitha mahalakshmi 2

இந்தியன் 2: இந்தியன் படத்தில் முதல் பாகத்தில் ஊழல் செய்த அதிகாரிகளை பழிவாங்கும் சேனாபதியாக நடித்திருந்தார் கமல். அதே போல இந்தியன் 2வில் உலக அளவில் ஊழல் செய்பவர்களை பழிதீர்ப்பதும், ஒவ்வொரு அரசு அதிகாரி வீட்டிலும் லஞ்சம் வாங்கும் ஊழியர்களை அவரது வீட்டில் இருப்பவர்களே காட்டிக்கொடுப்பது போலவும் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. 28 ஆண்டுகள் கழித்து மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இப்படத்தில், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா உட்பட பலர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் இந்தப் படம் இரண்டு பாகங்களாக வெளியானது. இந்தியன் 2 ஹிந்தியில் ஹிந்துஸ்தானி 2 என்றும் தெலுங்கில் பாரதியுடு 2 என்றும் வெளியாகியுள்ளது.

மோசமான மேக்கிங்: இந்தியன் படத்தை தொலைக்காட்சியில் பார்த்து பிரம்மித்துப்போன இந்த காலத்து இளசுகளுக்கு வேண்டுமானால், இந்த படம் ஓரளவிற்கு பிடித்து இருக்கலாம். ஆனால், அவர்களும் இதில் லாஜிக்கே இல்லை என்று ட்ரோல் செய்து வருகின்றனர். ஆனால், இந்தியன் படம் பார்த்தவர்கள் ஷங்கரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பிரம்மாண்டத்தை நம்பி மட்டுமே இந்தியன் 2 படத்தை இயக்கியுள்ளார் என்றும், மோசமான மேக்கிங், கதை, திரைக்கதையில் சொதப்பல், சில காட்சிகளில் மட்டுமே கமல் ஸ்கோர் செய்துள்ளார் என விமர்சித்து வருகின்றனர்.

ரச்சிதா மகாலட்சுமி: இந்நிலையில், இந்தியன் 2 படம் பார்த்த பிக் பாஸ் பிரபலம் ரச்சிதா மகாலட்சுமி, தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், நான் அதிகம் ஏமாற்றம் அடைந்துவிட்டேன். இதற்கு பதில் இந்தியன் படத்தை ரீரிலீஸ் செய்திருக்கலாம் என கூறியிருக்கிறார். இவரின் இந்த பதிவு இணையத்தில் தற்போது டிரெண்டாகி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே கமல் என நடித்த படம் எதுவும் வெற்றிப்பெறாத நிலையில், லோகேஷ் இயக்கிய விக்ரம் திரைப்படம் மூலம் கம்பேக் கொடுத்தார் கமல். அதுவும் வெறித்தனமான கம்பேக்காக அமைந்து பாக்ஸ் ஆபிஸிலும் 500 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இதைத் தொடர்ந்து கடந்த வாரம் வெளியாக கல்கி திரைப்படமும் ஆயிரம் கோடியை தொட்டுள்ள நிலையில், இந்தியன் 2 திரைப்படம் மோசமான விமர்சனத்தை பெற்று வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X