Fire: பேன்டும் போடல.. பட்டனும் போடல.. பாடல் முழுக்க ஒரே கசமுசா தான்.. ரச்சிதாவிற்கு குவியும் கண்டனம்!

சென்னை: நடிகை ரச்சிதா மகாலட்சமி, பாலாஜி முருகதாசுடன் சேர்ந்து பஃயர் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் பாடலின் ப்ரோமோ வெளியானது, அந்த பாடலில் ரச்சிதா மகாலட்சுமி படுகிளாமராக நடித்திருந்தார். இந்த பாடலை பார்த்த இணையவாசிகள் அவரை திட்டி தீர்த்து வந்த நிலையில், தற்போது பாடலின் முழு வீடியோ வெளியாகி உள்ளது. அதைப்பார்த்த ரசிகர்கள் வாயடைத்துப் போய் உள்ளனர்

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்த ரச்சிதா மகாலட்சுமிக்கு என்று தனி ரசிகர் கூட்டம் உண்டு. அந்த சீரியலைத் தொடர்ந்து நடித்த அவர், பிரிவோம் சந்திப்போம் சீரியலில் தன்னுடன் இணைந்து நடித்த தினேசை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்கள் இருவரும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நாச்சியார் என்ற சீரியலில் இணைந்து நடித்தனர். ஆனால், அந்த சீரியல் கொரோனா காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதையடுத்து, ரச்சிதா மற்றும் தினேஷுக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

rachitha mahalakshmi fire

ஃபயர் படத்தில் கவர்ச்சி: இதைத்தொடர்ந்து, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸில் கலந்து கொண்டார். அந்த வீட்டிற்குள் சிறப்பாக விளையாடி இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த அவர் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் என அடுத்தடுத்து படத்தில் நடித்து வருகிறார். தற்போது ரச்சித்தா, ஜே எஸ் கே சதீஷ் என்பவரின் இயக்கத்தில் உருவான ஃபயர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில், ரச்சிதா மகாலட்சுமி வெறும் சட்டை அணிந்து இருக்கும் புகைப்படம் இணையத்தில் டிரெண்டானது. அந்த போட்டோவை, ஃபயர் படத்தின் இயக்குநர் ரச்சிதா மகாலட்சுமியின் பிறந்தநாள் அன்று வெளியிட்டு இருந்தார்.

கடும் சண்டை: இதனால் மனம் உடைந்து போன ரச்சிதா, பிறந்தநாளுக்கு இந்த போட்டோவை போட்டுத்தான் வாழ்த்து சொல்லுவீங்களா என்று கேட்டு சண்டைக்கு போனார். இதற்கு பதிலடி கொடுத்த இயக்குநர் நீங்க நடித்ததை தான், நான் உங்க பிறந்தநாள் அன்று பதிவிட்டேன். நடிக்காததை கிராபிக்ஸ் பண்ணி போடலை, இந்த படத்தில் நடித்ததற்கான சம்பளம் வழங்கியதற்கான அனைத்து ஆதாரமும் என்னிடம் இருக்கிறது என்றார். இதையடுத்து இருவருக்கும் சண்டை உருவாகி ஃபயர் படத்திற்கு டப்பிங் கொடுக்க மாட்டேன் என்று ரச்சித்தா கூறினார். அதன்பிறகு இவர்களின் பஞ்சாயத்து ஓய்ந்தது.

முழு பாடலும் கசமுசா தான்: இரண்டு தினங்களுக்கு முன் ஃபயர் படத்தின் விவகாரம் ஒன்றின் டிரைலர் வெளியானது. அந்த பாடலில் பிக் பாஸ் பிரபலம் பாலாஜி முருகதாஸ் மற்றும் ரச்சிதா இருவரும் மிகவும் நெருக்கமாக நடித்திருந்தனர். அந்த படத்தில் இருந்து மெதுமெதுவாய் என்கிற பாடலில் ரச்சித்தா வெறும் சட்டை மட்டுமே அணிந்து கொண்டு இருக்க, பாலா , ரச்சித்தாவை அந்த இடத்தில் தொடுகிறார். இதை பார்த்து, வாயடைந்து போன ரசிகர்கள் ர ரச்சித்தாவா இப்படி மோசமாக நடித்துள்ளார் என கருத்துக்களை பகிர்ந்து வந்தனர். இந்நிலையில், தற்போது அந்த பாடலின் முழு வீடியோ வெளியாகி உள்ளது. அந்த பாடல் முழுக்க ரச்சித்தா, வெறும் சட்டை மட்டுமே போட்டுக்கொண்டு, மோசமான கவர்ச்சியாக நடித்து இருக்கிறார். சிலர் ரச்சித்தாவின் அழகை பாராட்டி கருத்துக்களை தெரிவித்து வந்தாலும், சிலர், அவரை விமர்சித்தும்

கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X