பிக் பாஸ்க்கு பிறகு சூப்பர் ஜாக்பாட்.. சூர்யா படத்தில் நடிக்கும் ரம்யா பாண்டியன்.. இயக்குநர் யாரு?

சென்னை: நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் பிக் பாஸ் பிரபலமும் நடிகையுமான ரம்யா பாண்டியன்.

Recommended Video

சூர்யா தயாரிப்பில் நடிக்கும் அந்த நடிகை..? அடித்தது ஜாக்பாட்...ரசிகர்கள் ஆச்சர்யம்

ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த ரம்யா பாண்டியன், பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்டார்.

பிக் பாஸ் வீட்டில் சிங்கப்பெண் என்கிற அங்கீகாரம் கிடைத்த ரம்யா பாண்டியனுக்கு புதிய பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

ஜோக்கர் படத்தில்

ஜோக்கர் படத்தில்

டம்மி டப்பாசு படத்தில் அறிமுகமான ரம்யா பாண்டியன், தேசிய விருது வென்ற ஜோக்கர் படத்தில் நாயகியாக நடித்து பிரபலமானார். இயக்குநர் ராஜுமுருகன் இயக்கத்தில் குருசோமசுந்தரம் நடிப்பில் வெளியான ஜோக்கர் படத்திற்கு பிறகு சமுத்திரகனியின் ஆண் தேவதை படத்திலும் நாயகியாக நடித்து இருந்தார்.

இடுப்பு போட்டோ

இடுப்பு போட்டோ

அதன் பின்னர் பெரிய பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் மொட்டை மாடியில் ரம்யா பாண்டியன் நடத்திய இடுப்பு போட்டோஷூட் ஓவர் நைட்டில் ஒட்டுமொத்த இணையதள வாசிகளின் ஹாட் ஃபேவரைட்டாகவே அவரை மாற்றியது. அதனை தொடர்ந்து பிளேபாய் புகைப்படக் கலைஞர் எல். ராமசந்திரன் கை வண்ணத்தில் சில போட்டோக்களும் இணையத்தை தெறிக்கவிட்டன.

சிரித்தே சமாளிப்பார்

சிரித்தே சமாளிப்பார்

அதன் பின்னர் விஜய் டிவியின் குக் வித் கோமாளியில் பிரபலமான ரம்யா பாண்டியனுக்கு இந்த 4வது சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்கும் பெரிய வாய்ப்பு கிடைத்தது. கமல் ரம்யாவை சிரித்தே சமாளிக்கும் பீடியாட்ரிசியன் என பட்டம் கொடுத்தார். நெட்டிசன்களும் ரம்யாவுக்கு ஏகப்பட்ட பட்டப் பெயர்களை வைத்தனர்.

கடைசி வரை

கடைசி வரை

டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கின் கடைசி டாஸ்க்கில் ஷிவானியும் ரம்யா பாண்டியனும் சுமார் 4 மணி நேரத்துக்கு மேலாக அந்த கயிற்றை விடாமல் ஒரே இடத்தில் நின்று சிங்கப்பெண்களாக மாறினர். சிங்கப்பெண் என்கிற அங்கீகாரத்துடன் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியின் போது எவிக்ட் ஆனார் ரம்யா பாண்டியன்.

செண்டை மேளத்துடன்

செண்டை மேளத்துடன்

டைட்டில் வின்னர் ஆரி, ரன்னர் அப் பாலாவுக்கு கூட அப்படியொரு வரவேற்பு கொடுக்கப் பட வில்லை. அந்த அளவுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியை முடித்து வீட்டுக்குப் போன ரம்யா பாண்டியனை அவரது குடும்பத்தினர் கொண்டாடி வரவேற்றனர். செண்டை மேளங்கள் முழங்க, வீதியில் ஆடிப் பாடி, கேக் வெட்டி ரம்யா கொண்டாடிய வீடியோ பலரையும் பொறாமைப்பட வைத்தது.

சூர்யா படத்தில்

சூர்யா படத்தில்

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சினிமா பட வாய்ப்புகள் சிலருக்கு சூப்பராகவே அமையும், ரம்யா பாண்டியனுக்கு சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கும் ஜாக்பாட் வாய்ப்பே தற்போது அடித்துள்ளது. அதனால் ரம்யா பாண்டியன் ரொம்பவே சந்தோஷத்தில் உள்ளார்.

இயக்குநர் யார்

இயக்குநர் யார்

வழக்கமாக 2டி நிறுவனம் தயாரிக்கும் படங்கள் எல்லாமே தரமான படங்களாகவே இருக்கும், ரம்யா பாண்டியனின் புதிய படமும் அப்படியே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை அறிமுக இயக்குநரான அரிசில் மூர்த்தி இயக்கவுள்ளார். அவர் சொன்ன கதை பிடித்துப் போகவே ரம்யா பாண்டியன் உடனடியாக நடிக்க சம்மதித்துள்ளாராம்.

ஹீரோ சோமசேகரா?

ஹீரோ சோமசேகரா?

ரம்யா பாண்டியன் ஹீரோயினாக சூர்யா பேனரில் நடிக்க உள்ளார் அந்த படத்தை அறிமுக இயக்குநர் அரிசில் மூர்த்தி இயக்க உள்ளார் என்கிற தகவல் சமூக வலைதளத்தில் பரவிய உடனே, அப்போ சோமசேகர் தான் ஹீரோவா என்றும் அவர் தான் ஹீரோவா நடிக்கணும் என்றும் சோம்யா ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X