க்யூட் மேக்ஸ்.. ஓரக்கண்ணால ஓரங்கட்டும் ரம்யா பாண்டியன்.. நீண்ட நாட்களுக்கு பிறகு ’இதை’ பண்ணாராம்!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்த பெண் போட்டியாளர் என்றால் அது நம்ம ரம்யா பாண்டியன் தான்.
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்ததுமே நடிகர் சூர்யா பேனரில் படம் நடிக்கும் வாய்ப்பும் அவருக்கு கிடைத்துள்ளது.
சமீபத்தில் இடுப்பு தெரியும் படி போட்டோ போட்ட ரம்யா பாண்டியன், இப்போ ஓரக்கண்ணால ஓரங்கட்டும் செல்ஃபியை ஷேர் செய்துள்ளார்.

ஹீட்டாக்கும் இடுப்பு
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பாகவே சமூக வலைதளத்தில் தனது இடுப்பு போட்டோ மூலம் ஏகப்பட்ட ரசிகர்களை ஓவர் நைட்டில் கவர்ந்தவர் நடிகை ரம்யா பாண்டியன். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகும் சில நாட்களுக்கு முன்பு அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட இடுப்பு அழகு தெரியும் போட்டோக்கள் இணையத்தையே ஹீட்டாக்கின.

அந்த செயின்
ரம்யா பாண்டியனின் இடுப்பை அந்த அளவுக்கு ஹாட்டாக மாற்றியதே, இடுப்பில் அவர் அணிந்திருக்கும் அந்த செயின் தான். அதை அணிந்து கொண்டு சிகப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் ஜொலிக்கும் காக்ரா சோலியை போட்டுக் கொண்டு வெரைட்டி வெரைட்டியாக போஸ் கொடுத்து அசத்தி வருகிறார்.

ஏகப்பட்ட ரசிகர்கள்
சமீபத்தில் நடந்து முடிந்த 4வது சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சிங்கப்பெண்ணாக கடைசி வரை கிராண்ட் ஃபினாலே வரை பிக் பாஸ் வீட்டில் இருந்து சக போட்டியாளருக்கு சரியான டஃப் போட்டி கொடுத்த நடிகை ரம்யா பாண்டியனுக்கு சமூக வலைதளங்களில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

விஷ பாட்டில்
எந்த அளவுக்கு ரசிகர்கள் உள்ளார்களோ, அதே அளவுக்கு சமூக வலைதளங்களில் ஹேட்டர்களும் ரம்யாவுக்கு அதிகமாகவே உள்ளனர். விஷப்பூச்சி என்றும், விஷப் பாட்டில் என்றும் ரம்யாவை பங்கமாக கலாய்த்து ஏகப்பட்ட ட்ரோல்களை போட்டு வருகின்றனர். ரம்யா பாண்டியன் எந்தவொரு போட்டோ ஷேர் செய்தாலும் அதற்கு கீழே கமெண்ட்டுகளை போட்டு கலாய்த்தும் வருகின்றனர்.

ஓரக்கண்ணால
இந்நிலையில், தற்போது செம க்யூட்டான செல்ஃபி ஒன்றை பதிவிட்டுள்ளார் நடிகை ரம்யா பாண்டியன். நீண்ட நாட்கள் ஆகின்றதாம் இப்படி ஒரு செல்ஃபியை எடுத்து என கேப்ஷனும் கொடுத்துள்ளார். ஒரு கண்ணை மூடி, ஓரக்கண்ணால ரசிகர்களை ஓரங்கட்டுவது போல ரம்யா பதிவிட்டுள்ள இந்த செல்ஃபிக்கு லைக்ஸ் அள்ளுது.

க்யூட் மேக்ஸ்
கோட் ஷூட்டில் உதட்டை ஒட்டி வைத்துக் கொண்டு இப்படியொரு செம அழகான செல்ஃபியை போட்டுள்ள ரம்யா பாண்டியனை பார்த்த பிக் பாஸ் போட்டியாளர் சம்யுக்தா, தனது ஸ்டைலில் 'க்யூட் மேக்ஸ்' என கமெண்ட் செய்துள்ளார். சம்யுக்தாவின் கமெண்ட்டுக்கு கீழே சைக்கோ மேக்ஸ் என நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
Recommended Video

அர்ச்சனா ஹார்ட்டீன்
ரம்யா பாண்டியனுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகும் சம்யுக்தா மற்றும் அர்ச்சனா தான் நெருங்கிய நண்பர்களாக உள்ளனர் என தெரிகிறது. அவர் போட்டோ போட்ட அடுத்த சில நிமிடங்களிலேயே இருவரும் கமெண்ட் செய்துள்ளனர். அர்ச்சனா ஹார்ட்டீன் எமோஜிகளை போட்டு லைக் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











