அதுக்குள்ள ஒரு வயசாகிடுச்சா.. குழந்தையின் முதல் பிறந்தநாளை கோலகலமாக கொண்டாடிய பிக் பாஸ் பிரபலம்!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 4ன் போட்டியாளர் ரியோ ராஜ் தனது மகள் ரிதியின் முதலாவது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
அதன் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வைரலாக்கி உள்ளார்.
பிக் பாஸ் போட்டியாளர்களான அர்ச்சனா, சோமசேகர், கேபிரியல்லா உள்ளிட்ட பலர் இந்த பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டனர்.

முதலாவது பிறந்தநாள்
விஜே, சின்னத்திரை நடிகர், ஹீரோ, பிக் பாஸ் பிரபலம் என பன்முகத் தன்மை கொண்ட ரியோ ராஜின் மகள் ரிதியின் முதலாவது பிறந்தநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டுள்ளது. மனைவி ஸ்ருதி மற்றும் மகள் ரிதியுடன் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுத்த புகைப்படங்களை ரியோ ராஜ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

குட்டி ஏஞ்சல்
அழகான குட்டி ஏஞ்சல் போல பட்டாம்பூச்சி சிறகுகளையெல்லாம் பொருத்தியபடி ரிதி பாப்பா செம க்யூட்டாக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களையும் நடிகர் ரியோ ராஜ் ஷேர் செய்துள்ளார். குடும்ப உறவினர்கள் மற்றும் பிக் பாஸ் நண்பர்கள் சூழ பிறந்தநாளை கொண்டாடி உள்ளார்.

பிக் பாஸ் வீட்டிலேயே
குழந்தை பிறந்து ஆறு மாதம் ஆன நிலையில், பிக் பாஸ் வீட்டுக்குள் வந்து விட்டார் ரியோ ராஜ். கிட்டத்தட்ட மூன்று மாதத்திற்கும் மேலாக மகள் ரிதியை பார்க்க முடியாமல், அவரது போட்டோக்கள் மற்றும் வீடியோவை பார்த்து ரொம்பவே புலம்பித் தவித்தார். கடைசி நேரத்தில் வீட்டிற்கு போனால் போதும் என்கிற நிலைக்கே ரியோ ராஜ் வந்து விட்டார்.

மனசார வாழ்த்தியவர்களுக்கு
மகள் ரிதியின் முதலாம் ஆண்டு பிறந்தநாள் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்த ரியோ ராஜ், எங்க வீட்டு குட்டி இளவரசியை வாழ்த்தியவர்களுக்கு நன்றி என்றும், யாரெல்லாம் மனசார விஷ் பண்ணிங்களோ அவங்களுக்கெல்லாம் ரொம்ப நன்றி என்றும் பதிவிட்டுள்ளார்.

அர்ச்சனா அண்ட் கோ
சமீபத்தில் சோமசேகரின் பிறந்தநாளை ஒட்டுமொத்த பிக் பாஸ் பிரபலங்களும் சேர்ந்து சென்று கொண்டாடிய நிலையில், அடுத்ததாக ரியோ ராஜின் மகள் ரிதியின் ஃபர்ஸ்ட் பர்த்டேவுக்கு அன்பு கேங்கை சேர்ந்த அர்ச்சனா, சோமசேகர் மற்றும் கேபி உள்ளிட்ட பிக் பாஸ் பிரபலங்கள் கலந்து கொண்ட புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன.

ஸ்டாண்டர்டான அன்பு
அன்பு கேங் என பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது இவர்களை பல நெட்டிசன்கள் கலாய்த்த போதிலும், பிக் பாஸ் முடிந்தும் அதே அன்பு தொடர்வதால் இந்த அன்பு ஸ்ட்ராட்டஜியான அன்பு அல்ல ஸ்ட்ராண்டடான அன்பு என்பதை நிரூபித்து வருகின்றனர். அர்ச்சனா தனது இன்ஸ்டாகிராமில் சோம், கேபியுடன் ரிதி பிறந்தநாளுக்கு சென்ற புகைப்படங்களை பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கமலிடம் வாழ்த்து
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது வாரம் வாரம் அகம் டிவி வழியே கமலை பார்த்து வந்த ரியோ ராஜ், பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னர் சமீபத்தில் கேரவனில் அவரை சந்தித்து எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலானது. உங்களிடம் நிறைய கற்றுக் கொண்டேன் என்றும் குறிப்பிட்டு இருந்தார். சீக்கிரமே ரியோ நடிப்பில் உருவாகி உள்ள பிளான் பண்ணி பண்ணனும் படம் திரைக்கு வருகிறது.


Click it and Unblock the Notifications











