For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ரியோவின் காலை பிடித்துக் கெஞ்சும் ரம்யா.. வைரலாகும் பரபரப்பான வீடியோ.. பிளான் பண்ணி பண்ணனும்!

  |

  சென்னை: நடிகை ரம்யா நம்பீசனின் காதலை வேண்டாம் என சொல்லும் பிக் பாஸ் பிரபலம் ரியோ ராஜின் பிளான் பண்ணி பண்ணனும் காதலர் தின ஸ்பெஷல் காட்சி வைரலாகி வருகிறது.

  தொகுப்பாளர், சீரியல் நடிகர் என கலக்கி வந்த ரியோ ராஜ், நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

  பிக் பாஸ் தமிழ் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட அவர், கடைசி நாள் வரை அந்த வீட்டில் தாக்குப் பிடித்து வெளியேறினார்.

  பழிச்சொல்

  பழிச்சொல்

  பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பல விஜய் டிவி பிரபலங்கள் பங்கேற்ற நிலையில், ரியோ ராஜை தான் பலரும் விஜய் டிவியின் செல்லப் பிள்ளை என்றும் குரூபிசத்தின் குருநாதர் என்றும் குட்டி சினேகன் எனவும் கண்டபடி விளாசித் தள்ளினர். அதன் காரணமாகவே கடைசி சில வாரங்களில் டோட்டலாக ஆஃப் ஆகி விட்டார் ரியோ ராஜ்.

  காசுக்கு ஆசை

  காசுக்கு ஆசை

  கேபிரியல்லா பணப்பெட்டியை உஷாராக தூக்கியதும் ரியோ ராஜ் அதற்காக மிகவும் போராடினார். அதை பார்த்த அவரது ரசிகர்கள் எல்லாம் கேபியை கடைசி வரை இருக்க வைக்கவே அவர் போராடினார் என முட்டுக் கொடுத்தனர். சமீபத்தில் நடந்த பிக் பாஸ் கொண்டாட்டத்தில் காசு எடுத்துக் கிட்டு கிளம்ப தான் ட்ரை பண்ணேன் என எதையுமே பிளான் பண்ணாம உண்மையை போட்டு உடைத்து விட்டார்.

  ரம்யாவுக்கு நோ

  ரம்யாவுக்கு நோ

  நடிகர் ரியோ ராஜ் அடுத்ததாக இயக்குநர் பத்ரி இயக்கத்தில் உருவாகி உள்ள பிளான் பண்ணி பண்ணனும் படத்தில் நடித்துள்ளார். தற்போது காதலர் தினத்தை கொண்டாடும் வகையில் அந்த படத்தில் இருந்து அட்டகாசமான கடற்கரை காட்சி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், காதலை சொல்லும் ரம்யா நம்பீசனுக்கு கறாராக நோ சொல்கிறார் ரியோ ராஜ்.

  கடமை தான் முக்கியம்

  காதலை விட நமக்கு கடமை தான் முக்கியம் என கேப்ஷன் கொடுத்து தற்போது அந்த வீடியோவை நடிகர் ரியோ ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். ரோபோ சங்கரிடம் பேசும் போது, ரம்யா நம்பீசன் ஐ லவ் யூ சொன்னதுக்கு, ஐ ஹேட் யூன்னு சொல்லிட்டேன் என ரியோ ராஜ் சொல்லும் காட்சி முரட்டு சிங்கிள்களை இன்றைய தினம் குஷிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  காலை பிடித்து கெஞ்சுறாங்களே

  காலை பிடித்து கெஞ்சுறாங்களே

  எப்படி இருந்தாலும் இந்த காட்சி கனவுக் காட்சியாகத்தான் இருக்கும் என்பது கன்ஃபார்ம். ஆனால், அதற்கு கூட ரியோவின் காலை பிடித்துக் கொண்டு ரம்யா நம்பீசன் கெஞ்சும் விதமாக காட்சியை அமைத்திருக்க வேண்டாம். மத்தபடி யுவன் சங்கர் ராஜா பின்னணி இசையில் படம் காமெடி ரகளையாக வரும் என்றே தெரிகிறது.

  எப்போ ரிலீஸ்

  எப்போ ரிலீஸ்

  பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போதே இந்த படத்தின் ஒரு பாடலை ரியோ ராஜ் வெளியிட்டார். எப்போ தான் ரியோவின் அடுத்த படம் வெளியாகும் என எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு காதலர் தினமான இன்று இந்த வீடியோவுடன் விரைவில் திரையரங்குகளில் தான் என்கிற அறிவிப்பையும் வெளியிட்டு உற்சாகப்படுத்தி உள்ளார்.

  English summary
  Rio Raj’s upcoming flick Plan Panni Pannanum team released a lovely glimpse from the film to celebrate this Valentine’s Day.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X