இதை செய்ய எப்படி டி துணிஞ்ச.. விஜே சித்துவின் மரணத்தால் உடைந்து போன பிக் பாஸ் பிரபலம்!
சென்னை: விஜே சித்ராவின் தற்கொலை செய்தி அறிந்த நடிகையும் பிக் பாஸ் பிரபலமுமான சாக்ஷி அகர்வால் ரொம்பவே ஷாக்காகி ஒரு இரங்கல் பதிவை வெளியிட்டுள்ளார்.
Recommended Video
இதை செய்ய எப்படி டி துணிஞ்ச எனக் கேட்டு, உனக்கு அந்த முடிவு நேருவதற்கு முன்பாக யாரிடமாவது மனம் விட்டு பேசியிருந்தா நல்லா இருந்திருக்குமே என்றும் பதிவிட்டுள்ள ட்வீட் ரசிகர்களை உலுக்கி வருகிறது.
விஜய் டிவி ரசிகர்களும், சினிமா பிரபலங்களும் சித்ராவின் மரண செய்தி அறிந்து சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

போலீசார் விசாரணை
ஹோட்டல் அறையில் வருங்கால கணவருடன் சித்ரா தங்கியிருந்த நிலையில், தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது மிகப்பெரிய சந்தேகத்தை கிளப்பி இருக்கிறது. அடுத்த மாதம் திருமணம் ஆகவுள்ள நிலையில், அப்படி என்ன சித்ராவுக்கு பிரச்சனை என்கிற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி உள்ளனர்.

பேரதிர்ச்சியில் ரசிகர்கள்
ஏகப்பட்ட ரசிகர்கள், இது வெறும் கனவாக இருக்கக் கூடாதா? வெறும் 28 வயது இளம் நடிகை இப்படி தூக்கிட்டுக் கொள்ளும் அளவுக்கு அவருக்கு என்ன பிரச்சனை நேர்ந்தது என்றும், ஷூட்டிங்கில் ஏதாவது அவமானம் ஏற்பட்டதா? இல்லை வருங்கால கணவருடன் சண்டையா என்றும் ஏகப்பட்ட கேள்விகளை சமூக வலைதளங்களில் எழுப்பி வருகின்றனர்.

நடிகைகள் இரங்கல்
நடிகை குஷ்பு, ஆத்மிகா, பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை ஹேமா சதீஷ் என ஏகப்பட்ட நடிகைகள் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நடிகை விஜே சித்ராவின் திடீர் தற்கொலையால் ஷாக் ஆகி தங்களது ஆழ்ந்த இரங்கல்களையும், அவருக்கு என்ன கொடுமை நேர்ந்தது என தெரிந்து கொள்ளவும் பதிவுகளை போட்டு வருகின்றனர்.

எப்படி டி துணிஞ்ச
தற்கொலை செய்து கொள்ள எப்படி டி துணிஞ்ச என பிக் பாஸ் பிரபலமும் நடிகையுமான சாக்ஷி அகர்வால் தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். தற்கொலை முடிவை எடுப்பதற்கு முன்பாக, யாரிடமாவது மனம் விட்டு பேசியிருக்கலாமே, உனக்கு இப்படி ஆகியிருக்கக் கூடாது என்றும் பதிவிட்டு ரொம்பவே உடைந்து போயுள்ளார்.

நினைத்த அமைதி
மேலும், நீ தேடிய அமைதி இப்போ நீ இருக்கும் இடத்தில் கிடைத்திருக்கும் என நம்புகிறேன். மிகவும் துடிப்பான, வசீகரமான பெண்ணாக இருந்த நீ இப்படி சீக்கிரமாக எல்லோரையும் விட்டுச் சென்றது சரியில்லை என்றும் நடிகை சாக்ஷி அகர்வால் தனது பதிவில், விஜே சித்ராவின் புகைப்படத்தை ஷேர் செய்து ட்வீட் போட்டுள்ளார்.

ஷிவானியுடன் சண்டை
பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகும் முன்னதாக இன்ஸ்டாகிராமில் சித்ராவுக்கும் ஷிவானிக்கும் இடையே மிகப்பெரிய சண்டை வெடித்தது குறிப்பிடத்தக்கது. ஷிவானி சித்ராவின் கமெண்ட்டுக்கு பதிலடி கொடுத்த நிலையில், இருவரது ரசிகர்களும் மோதிக் கொண்டனர். இந்நிலையில், தற்போது ஒட்டுமொத்த ரசிகர்களும் விஜே சித்ரா தற்கொலை செய்து கொண்டதை அறிந்து அதிர்ச்சியாகி உள்ளனர்.


Click it and Unblock the Notifications











