ராஷ்மிகா மாதிரி கிளாமரா டிரெஸ் போட்டா மட்டும் பத்தாது.. பிக் பாஸ் பிரபலத்தை பங்கம் பண்ணும் ஃபேன்ஸ்!

சென்னை: தெலுங்கு சினிமாவின் மாஸ் நகடிர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள 'புஷ்பா 2' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'பீலிங்ஸ்' பாடல் இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது. இந்த பாடலுக்கு ஏற்றபடி பலரும் பலவிதமாக ஆடி வீடியோவை பதிவிட்டு வரும் நிலையில், நடிகை சனம் ஷெட்டி ஆடிய ஆட்டத்தை பார்த்து நெட்டிசன்கள் அவரை பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் நடித்த புஷ்பா 2 திரைப்படம் டிசம்பர் 5ந் தேதி வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வசூலில் மாஸ் காட்டி வருகிறது. படம் வெளியான முதல் நாளில், ரூ. 294 கோடியை வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மேலும்,

sanam shetty pushpa 2 rashmika mandana allu arjun

6 நாட்களில் உலகளவில் ரூ.1000 கோடிக்கும் மேல் வசூலை அள்ளி இப்படம், 15 நாட்களில், உலகளவில் 15 நாட்களில் ரூ. 1475 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. தமிழகத்தில் நேற்று விடுதலை 2 திரைப்படம் வெளியான போதும், புஷ்பா 2படத்தின் வசூல் குறையவில்லை.

வித்தியாசமான ஆட்டம்: புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் ஊ சொல்றியா மாமா பாடலுக்கு சமந்தாவின் ஆட்டத்தை பார்க்க ஒரு கூட்டமே கூடிய, அதே போல புஷ்பா 2 இரண்டாம் பாகத்தில், 'ஃபீலிங்ஸ்' பாடல் ரசிகர்களை ஆட்டம் போட வைத்துள்ளது. இப்பாடலை தமிழில் விவேகா பாடல் எழுத செந்தில் கணேஷ், ராஜலட்சுமி இணைந்து பாடி உள்ளனர். இணையத்தில் இந்த பாடல் டிரெண்டாகி வரும் நிலையில், பிரபலங்கள் பலரும் இந்த பாடலுக்கு விதவிதமான உடையில் ஆட்டம் போட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகை ரவீனா தாஹா, இந்த பாடலுக்கு வித்தியாசமாக பரதநாட்டிய உடையில் ஆட்டம் போட்டது டிரெண்டானது.

கிளாமரா டிரஸ் போட்டா மட்டும் பத்தாது: இந்த ஆட்டத்தை எல்லாம் பார்த்த நடிகை சனம் ஷெட்டி, தனது இன்ஸ்டாகிராமில் குட்டி பாவாடை மற்றும் ஜாக்கெட்டுடன் ஆட்டம் போட்டுள்ளார். இந்த வீடியோவைப் பார்த்த இணையவாசிகள், புஷ்பா 2 படத்தில் அந்த 'பீலிங்ஸ்' பாட்டுல ராஷ்மிகாவும் அல்லு அர்ஜூனும் என்னம்மா ஆட்டம் போட்டு இருப்பாங்க, ஆனால் நீங்க என்ன பண்றீங்க, இதுக்கு பேரு ஆட்டமா, ராஷ்மிகா மாதிரி கிளாமரா டிரெஸ் போட்டா மட்டும் பத்தாது அதுக்கு ஏத்தமாதிரி டான்ஸ் ஆட வேண்டும் என்று சனம் ஷெட்டியை இணையவாசிகள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

sanam shetty pushpa 2 rashmika mandana allu arjun

நடிகை சனம் ஷெட்டி: நடிகை மற்றும் மாடல் அழகியான சனம் ஷெட்டி, 2016 ஆம் ஆண்டு மிஸ் தென்னிந்தியா என்ற பட்டத்தைப் பெற்றார். தமிழ், கன்னட திரைப்பட நடிகையான இவர் அம்புலி படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தர்ஷன், தன்னை காதலித்து வந்ததாகவும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த பிரபலத்திற்கு பிறகு தன்னை கழட்டி விட்டு சென்றுவிட்டார் என்று கூறி பெரும் புயலை கிளப்பினார். அதைத்தொடர்ந்து, பிக் பாஸ் சீசன் நான்கில் போட்டியாளராக கலந்து கொண்ட சனம் ஷெட்டி, தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியை ரிவ்யூ செய்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X