முதல் சீசனைவிட.. பிக் பாஸ் சீசன் 2 போட்டியாளர்கள் உண்மையிலேயே கொடுத்து வச்சவங்க தான்!
Recommended Video

சென்னை: பிக் பாஸ் சீசன் 2வில் போட்டியாளராக கலந்து கொண்ட ஷாரிக் புதிய படமொன்றில் நாயகனாக ஒப்பந்தமாகியுள்ளார்.
இம்முறை பிக் பாஸ் சீசன் 2வில் கலந்து கொண்டவர்களில் நித்யாவைத் தவிர மற்றவர்கள் அனைவருமே திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் தான். படவாய்ப்புகள் இல்லாததால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்ததாக, டைட்டில் வின்னர் ரித்விகா உட்பட பலர் மேடையிலேயே வெளிப்படையாகக் கூறினர்.
அவர்கள் எதிர்பார்த்ததைப் போலவே, நிகழ்ச்சி முடிந்த பிறகு அதில் கலந்து கொண்ட பலருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் அமைந்து வருகிறது.

புதிய படங்கள்:
சமீபத்தில், மஹத் தனது சக போட்டியாளர்களான ஐஸ்வர்யா மற்றும் யாஷிகாவுடன் தனித்தனியே இரண்டு படங்களில் ஒப்பந்தமானார். இதேபோல், ஐஸ்வர்யாவும், ஆரியுடன் நடிக்கும் படத்தின் பூஜை கடந்த வாரம் நடைபெற்றது.

உக்ரம்:
இந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் மஹத், ஐஸ்வர்யா மற்றும் யாஷிகாவுடன் அதிக நட்புடன் பழகிய ஷாரிக்கும் தற்போது நடிகராகியுள்ளார். அவர் நடிக்கவுள்ள படத்திற்கு உக்ரம் என பெயரிட்டுள்ளனர். அட்டு படத்தை இயக்கிய ரத்தன் லிங்கா இந்த படத்தை இயக்கவுள்ளார். ரொமாண்டிக், ஆக்சன், திரில்லர் படமாக இது உருவாக இருக்கிறது.

அர்ச்சனா:
அட்டு படத்தில் ஹீரோயினாக நடித்த அர்ச்சனா தான், இப்படத்தில் ஷாரிக்கின் ஜோடியாக நடிக்கிறார். அர்ச்சனாவின் நடிப்பு திறமையை பார்த்து, தன் அடுத்த படத்திலும் அவருக்கு நாயகி வாய்ப்பு கொடுத்திருப்பதாக இயக்குனர் கூறுகிறார்.

வாரிசு நடிகர்:
ஷாரிக் பிரபல வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகரான ரியாஸ் கான் - உமா ரியாஸ்கான் நட்சத்திர தம்பதியின் மகன் ஆவார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, ஐஸ்வர்யா தத்தாவைக் காதலிப்பதாக கூறி சர்ச்சையில் சிக்கினார் ஷாரிக். குறைந்த வாரங்களிலேயே பிக் பாஸ் வீட்டில் இருந்து அவர் வெளியேறியபோதும், மக்களிடையே அதிக பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











