ஒல்லியா இருந்தா தான் இங்கே பட வாய்ப்பே கிடைக்குது.. உடல் எடையை குறைத்த பிக் பாஸ் பிரபலம் பொளேர்!

மும்பை: நல்லா குண்டா கொழு கொழுன்னு இருந்த பிக் பாஸ் பிரபலம் தான் ஏன் உடல் எடையை குறைத்தேன் என்பதை வெளிப்படையாக கூறி கூகுள் டிரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளார்.

பிக் பாஸ் சீசன் 13ல் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை ஷெனாஸ் கில்.

கடும் டயட் இருந்து தற்போது ஒல்லி பெல்லி நடிகையாக மாறியுள்ள அவர் சமீபத்தில் யூடியூப் லைவ்வில் ரசிகர்களுடன் பேசும் போது உண்மையை அப்படியே ஓப்பனாக பேசி வைரலாகி உள்ளார்.

ஷெனாஸ் கில்

ஷெனாஸ் கில்

பஞ்சாபி நடிகையான ஷெனாஸ் கவுர் கில் கடந்த பிக் பாஸ் சீசன் 13ல் போட்டியாளராக கலந்து கொண்டார். 2017ம் ஆண்டு வெளியான சத் ஸ்ரீ அகால் இங்கிலாந்து எனும் பஞ்சாபி படம் மூலம் நடிகையாக அறிமுகமான இவர், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

சூப்பர் ஸ்லிம்

சூப்பர் ஸ்லிம்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் குண்டாக இருந்த ஷெனாஸ் கில்லுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தனர். ஆனாலும், வழக்கம் போல ஹேட்டர்கள் அவரது உடல் எடை மற்றும் அவரது உருவ தோற்றத்தை வைத்து கிண்டல் செய்து வந்தனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஷெனாஸ் கில்லுக்கு புதிய பட வாய்ப்புகள் கிடைக்கவே அவரும் வொர்க்கவுட் செய்து சூப்பர் ஸ்லிம் ஆகி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தினார்.

ஏன் உடம்பை குறைச்சீங்க

ஏன் உடம்பை குறைச்சீங்க

இந்நிலையில், சமீபத்தில் தனது ரசிகர்களுடன் யூடியூப் லைவ் ஒன்றில் உரையாடிய ஷெனாஸ் கில்லிடம் ரசிகர் ஒருவர் குண்டாக அழகா இருந்தீங்க, அந்த ஷெனாஸ் தான் எங்களுக்கு பிடித்திருக்கு ஏன் உடல் எடையை குறைச்சீங்க என கேள்வி எழுப்பி உள்ளார்.

ஒல்லியா இருந்தாதான் வாய்ப்பு

ஒல்லியா இருந்தாதான் வாய்ப்பு

அதற்கு உடனடியாக பதில் சொன்ன ஷெனாஸ் கில் எனக்கும் அந்த ஷெனாஸை தான் பிடிக்கும். ஆனால், என்ன செய்வது, இங்கே ஒல்லியான பெண்களுக்கு மட்டுமே வாய்ப்புகள் வருகிறது. குண்டாக இருந்தால் சீண்டவே மாட்டார்கள் என சினிமாவில் பெண்கள் மேல் இருக்கும் பார்வையை பொசுக்குன்னு போட்டு உடைத்து விட்டார்.

கூகுள் டிரெண்டிங்கில்

கூகுள் டிரெண்டிங்கில்

உண்மையை ஓப்பனாக சொன்ன ஷெனாஸ் கில் தற்போது கூகுள் டிரெண்டிங்கில் இந்தியளவில் அதிகமாக தேடப்பட்டு வருகிறார். ஒல்லி நடிகைகளுக்கு மட்டும் ஏன் வாய்ப்புகள் குவிகிறது, குண்டான நடிகைகளை ஏன் ஒதுக்குகிறார்கள் என தனியாக காரசார விவாதங்களே நடந்து வருகின்றன.

டயட் சீக்ரெட்

டயட் சீக்ரெட்

அதுமட்டுமின்றி ரசிகர்கள் ஆசையாக கேட்ட டயட் சீக்ரெட்டையும் எந்தவொரு ஒளிவு மறைவுமின்றி ஓப்பன் ஹார்டட்டாக கூறியுள்ளார் இந்த பிக் பாஸ் பிரபலம். தன்னால் ஜிம்முக்கு போய் வொர்க்கவுட் எல்லாம் பண்ண முடியாது என டிரெய்னர்களிடம் கூறி விட்டேன். அவர்கள், அதற்கு மாறாக உப்பு மற்றும் சர்க்கரையை உணவில் இருந்து குறைக்க வேண்டும் என்று கூறினர். அந்த இரண்டுமே இல்லை என்றால் சாப்பிடவே பிடிக்காது, குறைவாக சாப்பிட ஆரம்பித்தேன், என் உடம்பு குறைந்து விட்டது என தனக்கே உரிய பாணியில் ஷெனாஸ் கில் கூறியுள்ளார்.

ரிலீசுக்கு வெயிட்டிங்

ரிலீசுக்கு வெயிட்டிங்

ஹோன்ஸ்லா ராக் எனும் பஞ்சாபி படத்தில் நடித்து முடித்துள்ளார் நடிகை ஷெனாஸ் கில். பாலிவுட் பட வாய்ப்புகளுக்காக முயற்சி செய்தும் வருகிறார். லாக்டவுன் காரணமாக படம் வெளியாகாத நிலையில், தியேட்டர்கள் திறப்புக்காக காத்திருக்கிறார்.

அனுஷ்காவுக்கே குறைந்த வாய்ப்பு

அனுஷ்காவுக்கே குறைந்த வாய்ப்பு

திறமையான நடிகைகள் பலரும் தங்கள் உடல் எடை கூடிய நிலையில், ஏகப்பட்ட வாய்ப்புகளை இழந்து வருகின்றனர். நடிகை அனுஷ்கா இஞ்சி இடுப்பழகி படத்திற்காக உடல் எடையை அதிகரித்து பின்னர் அதனை குறைக்க முடியாமல் படாத பாடு பட்டார். உடல் எடை அதிகரித்த ஒரே காரணத்திற்காக ஏகப்பட்ட படங்களை அவர் இழந்துள்ளார். நடிகை நித்யா மேனன், சோனாக்‌ஷி சின்ஹா என ஏகப்பட்ட நடிகைகள் அந்த ஒரு காரணத்திற்காக சினிமா வாய்ப்புகள் பலவற்றை இழந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X