Just In
Don't Miss!
- Automobiles
மலிவான அட்வென்ஜர் பைக்... கேரளாவில் சக்கை போடு போடும் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 விற்பனை...
- News
மாசி மகம் : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரரை தரிசித்த துர்கா ஸ்டாலின் - வெற்றிக்கு வழிபாடு
- Education
ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய NCRTC துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!!
- Finance
3வது நாளாகப் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை..!
- Sports
சுயமாக யோசிங்க..யுவ்ராஜ் சிங்கின் விமர்சனம்..பதிலடி கொடுத்த அஸ்வின், புரியாமல் குழம்பும் ரசிகர்கள்
- Lifestyle
இந்த ராசிக்கார பெண்கள் அற்புதமான சகோதரிகளாக இருப்பாங்களாம்... இவங்க சகோதரியா கிடைக்க அதிர்ஷ்டம் வேணுமாம்...!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நீச்சல் குளத்தில் மொத்த முதுகையும் காட்டி.. மிரள விடும் பிக் பாஸ் ஷெரின்.. குவியுது லைக்ஸ்!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 4ன் கிராண்ட் ஃபினாலேவில் கருப்பு நிற சேலையில் சிலை போலவே வந்த ஷெரின் தனது பாலி தீவு சுற்றுலா பயண போட்டோக்களை ஷேர் செய்து வைரலாக்கி உள்ளார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்டவர் நடிகை ஷெரின்.
நான் கடவுள் இல்லை! S.A.சந்திரசேகருடன் முதல் முறையாக கைகோர்க்கும் சமுத்திரகனி
துள்ளுவதோ இளமை காலத்திலிருந்தே ஷெரினுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

கண்ணழகி
நடிகர் தனுஷ் ஹீரோவாக அறிமுகமான துள்ளுவதோ இளமை படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஷெரின். அந்த படத்திலே தனது அழகான கண்களால் ஏகப்பட்ட இளைஞர்களின் கனவுக் கன்னியாக மாறிய ஷெரின், இந்த வயதிலும் பல இளைஞர்களின் ஃபேவரைட்டாக வலம் வருகிறார்.

3வது சீசனில்
விசில், உற்சாகம் என சில படங்களில் நாயகியாக நடித்து கலக்கிய ஷெரின், பின்னர் பீமா படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினார். மார்க்கெட் சரிந்த நிலையில், சந்தானத்திற்கு ஜோடியாக நண்பேன் டா படத்திலும் நடித்து இருந்தார். இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனில் போட்டியாளராக ஷெரின் கலந்து கொண்டு மீண்டும் கம்பேக் கொடுத்தார்.

உடல் எடை அதிகரித்து
35 வயதாகும் ஷெரின் அதீத உடல் எடையுடன் சீனியர் நடிகையாகவே பிக் பாஸ் வீட்டில் என்ட்ரி கொடுத்தார். ஆனால், அதன் பின்னர் தனது உடல் எடையை அநியாயத்திற்கு குறைத்து மீண்டும் பழையபடி சிக்கென இருக்கும் ஷெரினாகவே மாறி தற்போது இன்ஸ்டாகிராமில் போட்டோக்களும் வீடியோக்களும் போட்டு அசத்துகிறார்.

பாலாவுடன் மோதல்
இந்த சீசனில் இருந்த இளம் பெண் போட்டியாளர்களுக்கே டஃப் கொடுக்கும் விதமாக அழகு பதுமையாக மாறிய ஷெரின், கிராண்ட் ஃபினாலேவில் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்கு வந்து ரியோவை எவிக்ட் செய்து அழைத்துச் சென்றார். பாலாவுக்கும் அவருக்கும் அங்கே ஒரு சின்ன மோதல் ஏற்பட தொடர்ந்து சமூக வலைதளத்தில் ஷெரினை பாலா ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

கருப்பு நிற சேலையில்
கிராண்ட் ஃபினாலேவுக்கு கட்டி வந்த கருப்பு நிற சேலையில் எடுத்த கவர்ச்சிகரமான போட்டோக்களையும், வீடியோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு லைக்குகளை குவித்து வருகிறார் நடிகை ஷெரின். ஷெரினின் அந்த புகைப்படங்களை பார்த்து ஏகப்பட்ட பேர் வாயை பிளந்து வாவ் சொல்லி வருகின்றனர்.

ஹெலிகாப்டர் அருகே
இந்நிலையில், தற்போது மாலித்தீவுக்கு சுற்றுலா சென்ற போது எடுத்த த்ரோபேக் போட்டோக்களை நடிகை ஷெரின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார். ஹெலிகாப்டர் அருகே நின்றபடி அவர் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

குரங்குகளுடன் குளியல்
மேலும், தாய்லாந்து, இலங்கை மற்றும் மால்தீவுக்கு சென்ற போது எடுத்த போட்டோக்களையும் அதன் உடன் ஷேர் செய்துள்ளார் நடிகை ஷெரின். நீரில் குரங்குகளுடன் குளிக்கும் போட்டோ ஒன்றையும் ஷேர் செய்து தனது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார் ஷெரின். எல்லா புகைப்படத்திலும் செம அழகா இருக்கீங்க என கமெண்ட்டுகள் குவிகின்றன.

முழு முதுகையும் காட்டி
தனது சுற்றுலா பயணத்தில் பிகினி உடை அணிந்து நீச்சல் குளம் ஒன்றில் முழு முதுகையும் காட்டி கவர்ச்சி பொங்க குளிக்கும் போட்டோ ஒன்றையும் தற்போது ஷேர் செய்து இணையத்தை சூடாக்கி உள்ளார் நடிகை ஷெரின். சமீபத்தில் எங்கேயும் சுற்றுலா செல்லவில்லையா? என்றும் இன்னும் நிறைய இது மாதிரியான போட்டோக்களை போடுங்க என்றும் ரசிகர்கள் ஜொள்ளு விட்டு வருகின்றனர்.